ETV Bharat / state

பணம் மோசடியில் ஈடுபட்ட திமுக பிரமுகர் மீது வழக்கு - பணம் மோசடியில் ஈடுபட்ட திமுக பிரமுகர்

சென்னையில் வீடு வாங்கித் தருவதாக் கூறி 77 லட்சம் ரூபாய் மோசடி செய்த திமுக வட்டச் செயலாளர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

செய்தியாளர்களைச் சந்தித்த பாதிக்கப்பட்டவர்

author img

By

Published : Feb 14, 2022, 6:37 PM IST

சென்னை: ஆலந்தூர் வேம்புலி சுபேதார் தெருவைச் சேர்ந்தவர் மனோகர் (58). இவர் 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காவல் ஆணையர் அலுவலகத்தில் மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், “2019ஆம் ஆண்டு வீடு வாங்க விரும்பியபோது, ரியல் எஸ்டேட் அதிபரும், 165ஆவது வார்டு வட்டச் செயலாளருமான ஜெகதீஷ்வரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

வேளச்சேரியில் தனக்குச் சொந்தமாக ஆயிரத்து 204 சதுர அடி கொண்ட வீடு விற்பனைக்கு உள்ளதாகத் தெரிவித்தார். அதன் மதிப்பு 87 லட்சம் எனவும் முதல் தவணையாக 40 லட்சம் ரூபாய் கொடுத்தால் விற்பனைப் பத்திரம் தருவதாக ஜெகதீஷ்வரன் என்னிடம் கூறினார்.

இதனை நம்பி 40 லட்சம் ரூபாயை ஜெகதீஷ்வரனின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பினேன். அந்த நிலத்தில் வில்லங்கம் இருந்ததால் மீண்டும் வேறொரு இடமான ஆதம்பாக்கம் கிராமத்தில் ஜெகதீஷ்வரன் எனக்கு காண்பித்தார்.

அந்த நிலத்தின் மதிப்பு 97 லட்சம் ரூபாய் என்பதால் மேலும் 37 லட்சம் கொடுத்தால் உடனடியாக விற்பனை பத்திரம் கொடுப்பதாகக் கூறியதை நம்பி அவரிடம் பணம் கொடுத்தேன்.

பின்னர் இரண்டு ஆண்டுகளாகியும் பத்திரப்பதிவு செய்து தராமல் இருந்ததால், அந்த இடம் குறித்து விசாரித்தபோது, ஏற்கனவே கூடுதல் விலைக்கு மற்றொருவருக்கு ஜெகதீஷ்வரன் விற்றது தெரியவந்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கொடுத்த பணத்தையும் தராமல் ஏமாற்றிவிட்டார். எனவே ஜெகதீஷ்வரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியாளரைச் சந்தித்த பாதிக்கப்பட்டவர்

இந்தப் புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி ஜெகதீஷ்வரன் மீது நம்பிக்கை மோசடி, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாகச் செய்தியாளரைச் சந்தித்த மனோகர், “77 லட்சம் ரூபாய் பணத்தை திமுக வட்டச் செயலாளர் ஜெகதீஷ்வரனிடம் கேட்டபோது, தான் ஆளுங்கட்சியில் இருப்பதாகவும், தன்னை ஒன்றும் செய்ய முடியாது எனவும் கூறுகிறார்.

மேலும், எனது மனைவி 163ஆவது வார்டு வேட்பாளராக நிற்பதாகவும், ஜெயித்த பிறகு பார்த்துக் கொள்வதாக மிரட்டுகிறார்” என்றார்.

இதையும் படிங்க: 5 ஆண்டுகள் சம்பளப் பாக்கி: புகைப்படக் கலைஞர் தூக்கிட்டுத் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.