ETV Bharat / state

ஆவடியில் தீப்பற்றி எரிந்த காரால் பரபரப்பு!

author img

By

Published : Jun 1, 2020, 11:53 AM IST

சென்னை: ஆவடியில் சாலையில் ஓடிய கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

A burning fire about a running car  running car fire  Chennai Avadi Fire incident  ஓடும் காரில் பற்றி எரிந்த தீ  ஆவடி தீ விபத்து

தமிழ்நாட்டில் கத்திரி வெயில் என்னும் அதீத வெயிற்காலம் முடிவுற்ற நிலையிலும்; சென்னையின் பல்வேறுப் பகுதிகளில் வெயிலின் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், ஏற்படும் அதிக உஷ்ணம் காரணமாக, வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இந்த நிலையில் ஆவடி கோயில் பதாகைப் பகுதியைச் சேர்ந்த குணகர ரெட்டி (63) என்பவர், தனது நண்பருடன் காரில் பட்டாபிராமில் உள்ள தனது மற்றொரு நண்பரைக் காண சென்றுகொண்டிருந்தார். அப்போது ஆவடி - திருப்பதி நெடுஞ்சாலையில் வாகனத்தின் இன்ஜின் முன், புகை வருவதைக் கண்ட அவர் சுதாரித்துக் கொண்டு வாகனத்தை சாலையோரம் நிறுத்தினார்.

அதற்குள் தீ மளமளவென பற்றி இன்ஜின் முழுவதும் எரியத் தொடங்கியது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குணகர ரெட்டி, பொதுமக்கள் உதவியுடன் வாகனத்தில் பிடித்த தீயை அணைத்தார்.

எனினும், காரின் முன்பக்கம் முழுவதுமாய் எரிந்து சேதம் ஆகியது .

ஆவடியில் தீப்பற்றி எரிந்த காரால் பரபரப்பு!

இந்த விபத்தில் காரில் உள்ள இருவருக்கும்; எந்த ஒரு காயமும் இல்லாமல் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்தச் சம்பவம் குறித்து பூவிருந்தவல்லி போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: முன்விரோதம் காரணமாக காருக்கு தீ வைத்த நபர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.