ETV Bharat / state

நீச்சல் பயிற்சியில் சிறுவன் உயிரிழப்பு.. நீச்சல் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட மூன்று பேர் கைது!

நீச்சல் குளத்தில் ஒரே நேரத்தில் 30-க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பயிற்சி அளித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டாக பெற்றோர் வேதனை தெரிவித்தனர்.

நீச்சல் பயிற்சியில் சிறுவன் உயிரிழப்பு
நீச்சல் பயிற்சியில் சிறுவன் உயிரிழப்பு
author img

By

Published : Apr 5, 2023, 4:05 PM IST

Updated : Apr 5, 2023, 10:21 PM IST

உயிரிழந்த சிறுவனின் தந்தை

சென்னை பட்டாளம் ஹாஜி முஹம்மது அப்பாஸ் தெருவை சேர்ந்தவர் ராகேஷ் குப்தா(48). உத்தரப் பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் தனது குடும்பத்தோடு சென்னையில் வசித்து வருகிறார். மெடிக்கல் ரெப்பாக பணிபுரிந்து வரும் இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அதில், மகன் தேஜா குப்தா வேப்பேரியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். தேஜா குப்தாவுக்கு இரண்டு மாத காலம் கோடை விடுமுறை என்பதால் நீச்சல் பயிற்சியில் தன்னை சேர்த்து விடுமாறு தந்தை ராகேஷ் குப்தாவிடம் கேட்டுள்ளார்.

இதனால் ராகேஷ் குப்தா சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான மை லேடி பூங்கா நீச்சல் குளத்தில் தனது மகனை நீச்சல் பயிற்சிக்கு சேர்த்துள்ளார். இந்த நீச்சல் குளத்தை முல்லை மலர் ஏஜென்சிஸ், ராஜூ என்பவர் மூலம் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி முனியாண்டி என்பவர் டெண்டர் எடுத்து பராமரித்து வருகிறார். கடந்த 13 நாட்களாக நீச்சல் பயிற்சிக்கு தேஜா குப்தாவை அவரது தந்தை ராகேஷ் குப்தா அழைத்து சென்று வந்துள்ளார்.

நேற்று (ஏப்ரல் 4) மாலை தேஜா குப்தா தனது தாத்தாவான சசிலேந்திர குமார் என்பவரோடு நீச்சல் குளத்திற்கு வந்துள்ளார். அதன் பின்பாக சிறுவனின் தந்தை ராகேஷ் குப்தாவும் நீச்சல் குளத்திற்கு வந்துள்ளார். நீச்சல் குளத்தில் பெற்றோர்களுக்கு அனுமதி இல்லாத காரணத்தினால் தேஜா குப்தாவை பயிற்சியாளர்களோடு அனுப்பி வைத்துவிட்டு அவரது தாத்தா சசிலேந்திர குமார் மற்றும் தந்தை ராகேஷ் குப்தா ஆகிய இருவரும் நீச்சல் குளத்திற்கு வெளியே காத்திருந்தனர்.

அந்த நேரத்தில், சுமார் 30 சிறுவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள் சுமன் மற்றும் செந்தில் ஆகிய இருவரும் பயிற்சிக்குப் பிறகு அனைத்து சிறுவர்களையும் அழைத்து வந்துள்ளனர். ஆனால், பயிற்சியாளர்களோடு தேஜா குப்தா வராததால் தந்தை மற்றும் தாத்தா இருவரும் சிறுவன் எங்கே எனக் கேள்வி எழுப்பினர். அப்போது பயிற்சியாளர்கள் சிறுவன் கழிவறைக்கு சென்றிருப்பதாகவும், அங்கு சென்று அழைத்துக் கொள்ளுமாறும் கூறியதாக கூறப்படுகிறது. அதனையடுத்து சிறுவனின் தந்தை மற்றும் தாத்தா ஆகிய இருவரும் கழிவறைக்கு சென்று பார்த்தபோது அங்கு சிறுவன் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதன்பின் நீச்சல் குளத்திற்கு சென்று பார்த்த போது சிறுவன் நீருக்கடியில் மூழ்கி கிடந்துள்ளார். இதைக்கண்ட இருவரும் கூச்சலிட்டுக்கொண்டே சிறுவனை நீச்சல் குளத்திலிருந்து மேலே தூக்கி வந்தனர். அப்போது சிறுவன் மயக்க நிலையில் இருந்தாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுவனை உடனடியாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் நீச்சல் குளத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து பெரியமேடு போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நீச்சல் குளத்தின் பயிற்சியாளர்கள் செந்தில் மற்றும் சுமன் ஆகிய இருவரும் அஜாக்கிரதையாக செயல்பட்ட காரணத்தினால், மட்டுமே சிறுவன் நீச்சல் குளத்தில் உள்ளே விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.

இதனால், நீச்சல் பயிற்சியாளர்கள் செந்தில் மற்றும் சுமன் ஆகிய இருவர் மீதும் அஜாக்கிரதையாக செயல்பட்டு பிறருக்கு மரணம் விளைவித்தல் (304-A) என்ற பிரிவின் கீழ் பெரியமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து சிறுவனின் தந்தை ராகேஷ் குப்தா கூறுகையில், தனது மகனின் மரணத்திற்கு நீச்சல் பயிற்சியாளர்கள் இருவர் மட்டுமே காரணம் எனவும் அனைத்து குழந்தைகளையும் கவனிக்க வேண்டிய நீச்சல் பயிற்சியாளர்கள் தனது குழந்தை நீச்சல் குளத்திற்கு உள்ளேயே விழுந்ததை கவனிக்காமல் இருந்ததாகவும் குற்றஞ்சாட்டி உள்ளார்.

சிறுவனை காணவில்லை என்று கூறியபோது மெத்தனபோக்காக பதில் கூறிய நீச்சல் பயிற்சியாளர்களே தனது மகனின் உயிரிழப்புக்கு காரணம். நீச்சல் குளத்தில் லைஃப் ஜாக்கெட் போன்ற பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லையெனவும், நீச்சல் குளம் சம்மந்தப்பட்ட அனைவரது மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார். இதுதொடர்பான போலீசாரின் விசாரணையில், 10 வயதுக்கு உட்பட்டவரை இந்த நீச்சல் குளத்தில் சேர்க்கக்கூடாது என்பதும் அதை மீறி சேர்த்துள்ளதும் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நீச்சல் பயிற்சியாளர்கள் இருவர் மற்றும் நீச்சல் குளம் டெண்டரை எடுத்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி முனியாண்டி ஆகியோரை காவல் நிலையத்திற்கு ஆஜராக கூறி பெரியமேடு போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல்துறைக்கு சென்னை மாநகராட்சிக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த சம்பவம் போலீசார் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மாலை நேரத்தில் கிடைத்த தகவலின்படி, 7 வயது சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில் நீச்சல் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் நீச்சல் பயிற்சியாளர்களான திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார்(37), திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த சுமன் (31), Life Guard ஊழியரான திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார்(25) ஆகிய மூன்று நபர்களை கைது செய்து பெரிய மேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நீச்சல் குளத்தில் சிறுவன் மரணம்... கதறியழுத தந்தை.. அலட்சியம் காரணமா?

Last Updated : Apr 5, 2023, 10:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.