சென்னை: விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் சென்னையைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் கடந்த ஒன்றாம் தேதி புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் 10ஆம் வகுப்பு படிக்கும் போது உடன் படித்த நிஷாந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் பள்ளியில் படிக்கும்போது காதலித்து வந்ததாகவும், பள்ளி படிப்பு முடிந்து கல்லூரியில் சேர்ந்த பிறகும் காதல் தொடர்ந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் நிஷாந்த், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணுடன் பலமுறை தவறாக நடந்து கொண்டதாகவும் அந்த புகாரில் பெண் குறிப்பிட்டுள்ளார். அதோடு தன்னிடம் இருந்து சிறிது சிறிதாக ரூ.68 லட்சம் ரூபாய் வரை நிஷாந்த் பணம் பெற்றுள்ளதாகவும் அந்தப் பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இளம்பெண் திருமணம் செய்ய வற்புறுத்தியபோது, நிஷாந்த் திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்ததும், இதனிடையே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முக்கிய பொறுப்பில் உள்ள தொழில் அதிபர் ஒருவரின் மகளுடன் நிஷாந்துக்கு திருமணம் நடைபெற இருப்பதும் இளம்பெண்ணுக்குத் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண், காதலன் நிஷாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு காதலன் நிஷாந்த், அவரது தாய் மற்றும் தந்தை ஆகிய மூவர் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கடந்த மூன்றாம் தேதி தொழில் அதிபர் மகளுடன் நிஷாந்துக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் அவர் மீது இளம்பெண் போலீசில் புகார் அளித்திருப்பதை அறிந்த பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்து, தங்கள் மகளுடன் நிஷாந்துக்கு நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தி விட்டனர்.
இதையும் படிங்க: மகனை சித்திரவதை செய்து கை, கால்களை முறித்த கொடூர தந்தை!
திருமணம் நின்றுபோனதை தங்கள் உறவினர்களுக்கு செல்போனிலேயே பெண் வீட்டார் குறுந்தகவல் அனுப்பி தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் நிஷாந்த் தலைமறைவாகி விட்டார். கடந்த 4 நாட்களாக போலீசார் நிஷாந்தை தேடி வந்த நிலையில், நேற்று தனது நண்பர்களோடு மது அருந்திக் கொண்டிருந்த நிஷாந்த் நண்பர் ஒருவரின் காரை எடுத்து கொண்டு வெளியே செல்வதாக தெரிவித்து விட்டு சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாட்ஸ் அப் மூலமாக மெசெஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் "நல்ல நண்பர்கள் நீங்கள்; நான் வாழ தகுதியற்றவன், ஏதாவது ஒரு ஏரியில் தனது சடலம் மிதக்கும்" என குறுந்தகவலில் தெரிவித்துள்ளார். இதனால் நிஷாந்தின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் என்று வந்துள்ளது. உடனே அவரது நண்பர்கள் இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கொடுத்த தகவலின் பேரில் போரூர் எஸ்.ஆர்.எம்.சி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
நிஷாந்தின் செல்போன் எண் போரூர் ஏரி அருகே ஸ்விட்ச் ஆனது அறிந்த போலீசார் அங்கு சென்று பார்த்த போது கார் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் விருகம்பாக்கம் தீயணைப்பு துறை வீரர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிஷாந்தின் உடலை போரூர் ஏரியில் தேடும் பணியில் ஈட்டுப்பட்டு வருகின்றனர். உண்மையில் நிஷாந்த் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது நாடகமாடுகிறரா? என்ற கோணத்தில் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: போலி டாக்டர் பட்டம் அளிக்கத் தூண்டியது எது? - ஹரீஷ் கொடுத்த பகீர் வாக்குமூலம்!