ETV Bharat / state

ஆந்திராவில் இருந்து கடத்தப்பட்ட 96 கிலோ கஞ்சா பறிமுதல்..!

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தனிப்படைக் காவல் துறையினர் 96 கிலோ கஞ்சாவைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் சிவ பிரசாத்
author img

By

Published : Jan 5, 2022, 9:54 PM IST

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கஞ்சா நடமாட்டத்தைத் தடுப்பதற்காகச் சென்னை மாநகரக் காவல்துறை ஆணையாளர் உத்தரவின் பேரில் வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் சிவபிரசாத் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, வண்ணாரப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கஞ்சா புழக்கம் குறித்துத் தனிப்படை காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு வந்தனர்.

தனிப்படைக் காவல் துறையினர் ரோந்து:

இந்நிலையில், நேற்று இரவு வண்ணாரப்பேட்டை வள்ளலார் நகர் பஸ் நிலையம் அருகே தனிப்படைக் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகப்படும்படி சென்று கொண்டிருந்த நபர் ஒருவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அந்த நபர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், நரசிபட்டினம் ,லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த மங்காராஜ்(35) என்பதும், இவர் ஆந்திராவிலிருந்து கஞ்சாவைக் கடத்தி வந்து சென்னையில் சிலருக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
உடனடியாக அவரை சோதனை செய்து அவரிடம் இருந்த 26 கிலோ கஞ்சாவைத் தனிப்படை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும், அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ் என்கிற சரண்குமார்(24), லட்சுமி என்கிற நொண்டிலட்சுமி(60) மற்றும் திருவொற்றியூரைச் சேர்ந்த கவிதா(25) ஆகியோரிடம் அவர் ஏற்கனவே கஞ்சாவை விற்பனைக்காக கொடுத்து இருந்தது தெரியவந்தது.

உடனடியாகக் காசிமேடு மற்றும் திருவொற்றியூர் பகுதியில் தனிப்படைக் காவல் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது காசிமேட்டைச் சேர்ந்த சரண்ராஜ் வீட்டில் 22 கிலோ கஞ்சாவும், லட்சுமி வீட்டில் 24 கிலோ கஞ்சாவும், கவிதா வீட்டில் 24 கிலோ கஞ்சாவும் இருந்தது தெரியவந்தது. உடனடியாக 2 பெண்கள் உட்பட 3 பேரையும் கைது செய்த தனிப்படை காவல் துறையினர் அவர்களிடம் இருந்த 70 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

96 கிலோ கஞ்சா பறிமுதல்..!:

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 4 பேர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட 96 கிலோ கஞ்சாவை வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் சிவபிரசாத் பார்வையிட்டார்.அப்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது,

”வண்ணாரப்பேட்டையில் கஞ்சா புழக்கத்தைத் தடுக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு தனிப்படையினர் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் தங்கியிருந்து அங்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மங்காராஜ் என்பவர் வண்ணாரப்பேட்டை பகுதிக்கு கஞ்சாவை எடுத்து வருவதை உறுதி செய்தனர்.

உடனடியாகச் சென்னை வந்த காவல் துறையினர் வண்ணாரப்பேட்டை பஸ் நிலையத்தில் வைத்து மங்காராஜைக் கைது செய்தனர்.

மேலும் மங்காராஜ் கொடுத்தத் தகவலின் அடிப்படையில் மற்ற 3 பேரையும் கைது செய்துள்ளனர். தொடர்ந்து கஞ்சா வியாபாரிகள் குறித்தும், அவர்களின் நெட்வொர்க் குறித்தும் தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆந்திரமாநிலம், ஒடிசா மாநிலப் பகுதிகளை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து கஞ்சா விநியோகம் செய்யப்படுவதும் தனிப்படை காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும் சிறப்பாகப் பணியாற்றி கஞ்சா வியாபாரிகளைக் கைது செய்த ஆய்வாளர் பிரான்வின் டேனி தலைமையில் இருந்த தனிப்படையை சேர்ந்த உதவி ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் முருகேசன், சதாசிவம், முகமது காட்டுபாவா, முகமது அசாருதீன், நல்லதம்பி ஆகியோரைத் துணை ஆணையாளர் பாராட்டினார்.

இதையும் படிங்க:நாளை முன்ஜாமீன் மனு விசாரணை; ராஜேந்திர பாலாஜி இன்று கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.