கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு அனைத்து பொது போக்குவரத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சுற்றுலா விசாவில் இந்தியா வந்த பல்வேறு நாட்டினரும் தங்களது சொந்த நாட்டிற்கு செல்ல முடியாமல் தவித்துவந்தனர். இவர்களை மீண்டும் அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்ப மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது.
அதன் ஒருபகுதியாக, சுற்றுலா விசா மூலம் இந்தியா வந்த 94 பேர் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் மலேசியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பால் சிக்கித் தவிப்பவர்களுக்கு விசா நீட்டிப்பு