ETV Bharat / state

பணியின்போது மறைந்த காவலர்களின் வாரிசுதாரர்கள் 912 பேருக்கு பணி நியமனம் - காவல் நிலைய வரவேற்பாளர்கள் பணி

பணிக்காலத்தில் காலமான காவலர்களின் வாரிசுதாரர்கள் 912 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதில், 8 வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

Heirs
Heirs
author img

By

Published : Aug 27, 2022, 5:02 PM IST

சென்னை: 2021-22ஆம் ஆண்டிற்கான காவல்துறை மானியக் கோரிக்கையில், காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை இன்முகத்தோடு வரவேற்று அவர்களின் குறைகளை கனிவோடு கேட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வரவேற்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இதற்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் மறைந்த காவலர்களின் வாரிசுகள் 1,132 பேருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடங்களுக்கு பணிக்காலத்தில் காலமான காவலர்களின் வாரிசுதாரர்கள் 1,132 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, முதற்கட்டமாக 457 ஆண்கள் மற்றும் 455 பெண்கள் என மொத்தம் 912 வாரிசுதாரர்களுக்கு தகவல் பதிவு உதவியாளர் / காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடத்திற்கு பணிநியமன ஆணைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 8 நபர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் இறையன்பு, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, காவல்துறை கூடுதல் இயக்குநர் சைலேஷ் குமார் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:ரூ.194. கோடி மதிப்பில் கட்டப்பட்ட மருத்துவ கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.