ETV Bharat / state

காவலர் உடற்பயிற்சி உபகரணங்கள்; ரூ. 89 லட்சம் ஒதுக்கீடு செய்து உத்தரவு! - காவலர்களுக்கு உடற்பயிற்சி உபகரணங்கள் வாங்க நிதி

தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளினர்கள், அலுவலர்களின் பயன்பாட்டிற்காக புதிய உடற்பயிற்சி உபகரணங்கள் வாங்க 89 லட்சத்து 35 ஆயிரத்து 920 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

காவலர் உடற்பயிற்சி உபகரணங்கள்; ரூ. 89 லட்சம் ஒதுக்கீடு செய்து உத்தரவு!
காவலர் உடற்பயிற்சி உபகரணங்கள்; ரூ. 89 லட்சம் ஒதுக்கீடு செய்து உத்தரவு!காவலர் உடற்பயிற்சி உபகரணங்கள்; ரூ. 89 லட்சம் ஒதுக்கீடு செய்து உத்தரவு!
author img

By

Published : Dec 15, 2021, 8:07 AM IST

சென்னை: உடல் நலனைப் பேணிக் காக்கும் வகையில் காவல்துறையினரின் பயன்பாட்டிற்காக புதிய உடற்பயிற்சி உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி நவம்பர் 16ஆம் தேதி அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது 7 மாநகராட்சிகளைக் கொண்ட பெருநகரங்கள் உள்பட 38 மாவட்டங்களுக்கு உடற்பயிற்சி உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு மாவட்டத்துக்கு 1 லட்சத்து 98 ஆயிரத்து 576 ரூபாய் வீதம் மொத்தமாக 89 லட்சத்து 35 ஆயிரத்து 920 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள உடற்பயிற்சி உபகரணங்களை வாங்குவதற்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்களை, அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்ப டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான நிதியைப் பெற்றுக்கொண்டதற்கான அறிக்கையை தலைமை அலுவலகத்துக்கு உடனடியாக அனுப்பவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து - சிதைவு பாகங்கள் சேகரிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.