மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளான பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம்., பி.ஏ.எஸ்.எல்.பி. (செவித்திறன், பேச்சு, மொழி குறியியல் பட்டப்படிப்பு), பி.பி.டி., பி.எஸ்சி. ரேடியோகிராபி, இமேஜிங் டெக்னாலஜி, ரேடியோ டெக்னாலஜி உள்ளிட்ட 17 பட்டப் படிப்புகளில் சுமார் 8,000 இடங்களில் சேர்வதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை செயலாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம். உள்ளிட்ட 17 மருத்துவம் சார்ந்த படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இன்று காலை 10 மணி முதல் வரும் 19ஆம் தேதி வரை
- www.tn.health.org,
- www.tnmedicalselection.org என்ற இணையதள முகவரியில் பூர்த்தி செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் விண்ணப்பக் கட்டணமாக 400 ரூபாய் இணைய வங்கி சேவை மூலம் செலுத்தலாம். பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் ஆகஸ்ட் 21ஆம் தேதி மாலை 5 மணிக்குள் செயலாளர் தேர்வுக் குழு, மருத்துவக் கல்வி இயக்ககம், கீழ்ப்பாக்கம் என்ற முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்பிவைக்க வேண்டும்.
அரசு மருத்துவக் கல்லூரியில் 2040 இடங்களும், அரசு ஒதுக்கீடு உட்பட 8,000 இடங்களில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அளிப்பதில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால்
- 9884224648,
- 9884224694,
- 9884224745,
- 9884224746 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.