ETV Bharat / state

நான் விஜய் சேதுபதிக்கு எதிராக உள்ளது போல் சித்தரிக்கிறார்கள்: சீனு ராமசாமி - muthaiah muralitharan

800 பட விவகாரத்திற்கு பின் நான் விஜய் சேதுபதிக்கு எதிராக உள்ளது போல் சித்தரிக்கிறார்கள் என்று இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

800-movie-issues-about-seenuramasamy
800-movie-issues-about-seenuramasamy
author img

By

Published : Oct 28, 2020, 3:46 PM IST

Updated : Oct 28, 2020, 3:53 PM IST

முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல தமிழ் உணர்வாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ் சினிமாவிலும் பல இயக்குநர்கள் அந்தப் படத்தில் நடிக்க வேண்டாம் என கோரிக்கை வைத்தனர். அதில் இயக்குநர் சீனு ராமசாமியும் ஒருவர். இவர் விஜய் சேதுபதியை வைத்து பல படங்களை இயக்கியுள்ளார்.

இந்தநிலையில், அடையாளம் தெரியாதவர்களிடம் இருந்து தனக்கு மிரட்டல்கள் வருவதாக சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இயக்குநர் சீனு ராமசாமி இன்று சென்னை போரூரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''நான் விஜய் சேதுபதிக்கு எதிராக இருப்பது போல தொடர்ந்து செய்திகள் சித்தரிக்கப்படுகிறது. நன்றி வணக்கம் என்று அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு என்ன பொருள் என்று தொலைபேசியில் அழைத்து கேட்டபோது, அது ஒரு நல்ல கதாபாத்திரம் என்று நான் தேர்வு செய்தேன். அதன் பிறகு தமிழர்களின் உணர்வை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், அரசியல் விமர்சனம் இருப்பதாகவும் தெரிந்து கொண்ட போது, தயாரிப்பு நிறுவனம் இதை புரிந்துகொண்டு விலகிச் சென்றார்கள். அதனால், அவர்களுக்கு நன்றி வணக்கம் என்று கூறினேன் என்றார்.

ஒட்டுமொத்த தமிழர்கள் மீதும் விஜய் சேதுபதி வைத்திருக்கும் அன்பை இதில் புரிந்து கொள்ளலாம். ஆனால், நான் விஜய் சேதுபதியை பற்றி தவறாக பேசியதாக வாட்ஸ்அப் மற்றும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிலர் தொடர்ந்து ஆபாசமாக தவறாக பேசி வருகிறார்கள்.

நன்றி வணக்கம் என்று நான் ட்விட்டரில் பதிவிட்டபோது அதற்கு கீழே ஆபாசமாக எதிர்வினைகள் வந்தது. அதனால், உடனே அதனை விளக்கி விட்டேன். விஜயதசமி அன்று விஜய் சேதுபதியுடைய அலுவலகத்திற்கு நான் சென்றிருந்தேன்.

இயக்குநர் சீனு ராமசாமி செய்தியாளர் சந்திப்பு

அனைவரும் விஜய் சேதுபதியிடம் கோரிக்கை வைத்தது போல நானும் விஜய் சேதுபதியிடம் கோரிக்கைதான் வைத்தேன், இது தவறா? எனக்கும் விஜய் சேதுபதிக்கும் எதிர்ப்பை உண்டாக்கி சிலர் குளிர் காய வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதற்காக காவல்துறையிடம் புகார் கொடுக்க இருக்கிறேன்.

தொடர்ந்து இது போன்று மிரட்டல் வருகிறது. என்ன நோக்கத்தோடு இப்படி செய்கிறார்கள் என்றே தெரியவில்லை, தெரிந்தால் கூட அவர்களிடம் நான் பேச தயாராக இருக்கிறேன். எந்த அரசியல் அமைப்பைச் சேர்ந்தவர்களும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. எனக்கும் விஜய் சேதுபதிக்கும் எந்த பிரச்னையும் இல்லை. என்னை தவறாக பேசியவர்கள் விஜய் சேதுபதி ரசிகர்கள் கிடையாது, அவர்கள் எல்லாம் என் தம்பிகள், இதற்கு பின்னணி என்னவென்று புரியவில்லை.

நானும் என்னுடைய குடும்பம் நிம்மதியாக வசித்து வருகிறோம். அப்படியிருக்கும் சூழலில், அச்சுறுத்தல் செய்வதனால் எனக்கு நடுக்கம் வந்துவிட்டது. இது குறித்து, விஜய் சேதுபதியிடம் பேசியபோது, நம் இருவருடைய நட்புக்கு இடையே யாராலும் பிரிவினையை ஏற்படுத்த முடியாது என்றார்.

மேலும், என்னுடைய புகாரை கொடுப்பதற்கு முதலமைச்சர் நேரம் கொடுத்தால், அவரை நேரில் சந்தித்து புகார் கொடுப்பேன்'' என்றார்.

இதையும் படிங்க: என் கோரிக்கை விஜய் சேதுபதி ஏற்றுக்கொள்வார் என நம்புகிறேன்: தோழர் தியாகு

Last Updated : Oct 28, 2020, 3:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.