ETV Bharat / state

சென்னை வந்தடைந்த 8.60 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி - doses of COVID-19 vaccine

புனேவிலிருந்து விமானம் மூலம் எட்டு லட்சத்து 60 ஆயிரம் கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்தடைந்தன.

கோவிஷீல்டு தடுப்பூசி
covid-19 vaccine
author img

By

Published : Jul 20, 2021, 5:51 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசி மருந்துகளை உடனடியாக வழங்கக்கோரி ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கைவைத்தார்.

அவரின் கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசும் தமிழ்நாட்டிற்கு தடுப்பூசியை அனுப்பிவருகிறது. கரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தடுப்பு முகாம்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

புனேவிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 42 பார்சல்களில் ஐந்து லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. உடனடியாக சென்னை விமான நிலைய அலுவலர்கள் தடுப்பூசி பார்சல்களை மாநில அரசின் சுகாதாரத் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

விமான நிலையத்திலிருந்து குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மாநிலத் தடுப்பூசி சேமிப்புக் கிடங்கிற்கு அவற்றை சுகாதாரத் துறையினர் கொண்டுசென்றனர்.

அங்கிருந்து தடுப்பூசி மருந்துகளை தட்டுப்பாடு உள்ள இடத்திற்கு அனுப்பி வைக்கவுள்ளதாகச் சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர். அதேபோல் ஒன்றிய தொகுப்பிலிருந்து சென்னை வந்த, மூன்று லட்சத்து 60 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள், பெரியமேட்டில் உள்ள மத்திய மருந்து கிடங்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதையும் படிங்க: ’தனியார் மருத்துவமனைகளில் விரைவில் இலவச கரோனா தடுப்பூசி’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.