ETV Bharat / state

75-வது சுதந்திர தின விழா: சென்னையில் 2வது அணிவகுப்பு ஒத்திகை - 7 படைப்பிரிவினர் பங்கேற்ற அணிவகுப்பு மரியாதை

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இரண்டாவது அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

75வது சுதந்திர தின விழா: சென்னையில் 2வது அணிவகுப்பு ஒத்திகை

author img

By

Published : Aug 11, 2022, 2:29 PM IST

சென்னை: 75-வது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்ற உள்ளார்.

இதற்காக இன்று நடைபெற்ற 2ஆம் நாள் ஒத்திகையில் முதலமைச்சரை காவல்துறை வாகன அணிவகுப்புடன் அவரது இல்லத்திலிருந்து அழைத்து வருவது போன்று பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

அதனை தொடர்ந்து கமாண்டோ படை, குதிரைப்படை, பெண் காவலர்கள் உள்ளிட்ட 7 படைப்பிரிவினர் பங்கேற்ற அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டு தேசிய கொடியை ஏற்றுவது போன்று ஒத்திகை நடைபெற்றது.

75வது சுதந்திர தின விழா: சென்னையில் 2வது அணிவகுப்பு ஒத்திகை

அதனை தொடர்ந்து தகைசார் தமிழர் விருது, ஏபிஜே அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது உள்ளிட்ட விருதுகள் வழங்குவது போன்று ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

சுதந்திர தின விழா ஒத்திகை நடைபெற்ற நேரத்தில் நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை உள்ள காமராஜர் சாலை, இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை உள்ள ராஜாஜி சாலை, மற்றும் கொடிமரச்சாலை ஆகிய சாலைகளில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அடுத்த இறுதி ஒத்திகை நிகழ்ச்சி 13ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்திய தமிழ்நாடு அரசுக்கு மோடி பாராட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.