இன்று 71ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சீதாலட்சுமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர், மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம், ஆட்டோ, கார் போன்றவற்றை பயனாளிகளுக்கு தாட்கோ நிறுவனம் மானியத்தில் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இதேபோல், சென்னை அண்ணா நகரில் உள்ள ஜிஎஸ்டி, மத்திய கலால் வரி தணிக்கை அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் ஆணையத்தின் ஆணையாளர் ரவீந்திரநாத் வீரர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டு மூவர்ண தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
இதையும் படிங்க: மதிநுட்பத்தால் வெற்றிகண்ட திருவிதாங்கூர் படைகள்!