ETV Bharat / state

இரவு 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM

இரவு 7 மணி செய்திச் சுருக்கம்
இரவு 7 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Sep 30, 2021, 7:10 PM IST

இயல்பைவிட இந்தாண்டு பருவமழை அதிகரிப்பு!

தென்மேற்குப் பருவமழை கணக்கீட்டில் இயல்பைவிட இந்தாண்டு 17 விழுக்காடு அதிகமாக மழை பதிவாகியுள்ளதென தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் - சபாநாயகர் அப்பாவு கடும் எதிர்ப்பு

3ஆவது, 4ஆவது உலைகளிலிருந்து வெளியாகும் அணுக்கழிவுகளை கூடங்குளத்திலேயே சேமிக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

வேளாண் பல்கலை துணைவேந்தர் தேர்வு: தேடல் குழுவை அமைத்தார் ஆளுநர்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகப் புதிய துணைவேந்தரைத் தேர்வுசெய்ய தேடல் குழுவை பல்கலைக்கழகங்களின் வேந்தரும், மாநில ஆளுநருமான ஆர்.என். ரவி அமைத்துள்ளார்.

மக்கள் பள்ளி திட்டம் - வீடு தேடிவரும் ஆசிரியர்கள்

தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் வீடுகளுக்கே சென்று கற்பிக்கும்விதமாக, மக்கள் பள்ளி திட்டத்தை, பள்ளிக் கல்வித் துறை அறிமுகப்படுத்த உள்ளது.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை ஆய்வுசெய்த ஸ்டாலின்

தருமபுரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வுசெய்தார்.

கரோனாவால் குழந்தைத் திருமணங்கள் அதிகரிப்பு

கரோனா தாெற்றால் மாணவர்களுக்குச் சரியான முறையில் கல்வி கிடைக்காததன் காரணமாகவே குழந்தைத் திருமணங்கள், குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ‘சைல்டு ரைட்ஸ் அண்ட் யு’ என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

இரு விரல் பரிசோதனை: மகளிர் ஆணையம் கண்டனம்

விமானப்படை பயிற்சி கல்லூரியில், பெண் அலுவலருக்கு நடந்த பாலியல் துன்புறுத்துதல் வழக்கில், தடைசெய்யப்பட்ட இரு-விரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதற்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட கன்னட நடிகை

பிரபல கன்னட தொலைக்காட்சி நடிகை சௌஜன்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இளையராஜா இசையில் உருவாகும் ‘நினைவெல்லாம் நீயடா’!

இளையராஜா இசையில் ஆயிரத்து 417ஆவது படமாக ஆதிராஜன் இயக்கும் 'நினைவெல்லாம் நீயடா' படம் உருவாகிறது.

பாகம்பரி மடத்தின் அடுத்த மடாதிபதி யார்?

பாகம்பரி மடத்தின் மடாதிபதியான மஹந்த் நரேந்திரகிரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது அடுத்த மடாதிபதியாக பல்பீர்கிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.