சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த மோனிகா ஸ்ரீ என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் அனுராதா ரூ.20,000 லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடிப்பட்டார். அவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனிடையே நேற்று (அக்-21) அனுராதா வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பீரோவில் இருந்த கணக்கில் ரூ. 7.21 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பணத்திற்கு கணக்குகள் கிடையாது என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஆந்திராவில் கடனை திருப்பி செலுத்தாத தொழிலாளியின் மனைவி கடத்தல்