ETV Bharat / state

மருத்துவ பட்டப்படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு... சம நீதி வழங்க இது வழிவகுக்கும்!

சென்னை: மருத்துவப் பட்டப்படிப்பு இடங்களில், 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்குவதால், சுமார் 300-க்கு மேல் இடங்கள் ஏழை, எளிய மாணவர்களுக்கு கிடைக்கும் என்றும், இதன்மூலம் சம நீதி வழங்க இது வழிவகுக்கும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மருத்துவ பட்டப்படிப்பு இடங்களில்,  7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்குவதால், சுமார் 300க்கு மேல் இடங்கள் ஏழை எளிய  மாணவர்களுக்கு இதன் மூலம் சம நீதி  வழங்க இது வழிவகுக்கும்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

author img

By

Published : Sep 15, 2020, 10:57 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (15.9.2020) சட்டப்பேரவையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கான இடஒதுக்கீடு சட்ட முன்வடிவை அறிமுகம் செய்து, உறுப்பினர்களின் விவாதத்திற்குப் பின்னர் பதிலுரை ஆற்றினார்.

அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கான இடஒதுக்கீட்டு முறையினை கொண்டுவருதல் குறித்த சட்டம் நிறைவேற்றப்படும் என நான் அறிவித்ததற்கிணங்க தற்பொழுது இச்சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது உறுப்பினர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

1993ஆம் ஆண்டு 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டினைத் தொடர்ந்து செயல்படுத்தும் வகையில், உரிய சட்டத்தினை இயற்றி, அரசமைப்புச் சட்ட ஒன்பதாவது விவர அட்டவணையில் சேர்த்து, அதற்கு அரசமைப்பு சட்டம் 31(பி)ன் கீழ் பாதுகாப்பினையும் பெற்றுத் தந்தவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. அவரால்தான் தமிழ்நாட்டில் தற்போது கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு சாத்தியமாகியுள்ளது.

அதிமுக அரசு, அரசுப் பணிகளில் நியமனங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் மாணாக்கர் சேர்க்கை 2 ஆகியவற்றிற்கான இட ஒதுக்கீட்டை செயல்படுத்தி, சமூக நீதியை காப்பதுடன், பிற்படுத்தப்பட்ட, ஏழை எளிய மக்கள் நலனை காப்பதிலும் முன்னோடி அரசாக உள்ளது.

2006-2007ஆம் ஆண்டிலிருந்து 2010-2011ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஆட்சியின் பொழுது புதிதாக 300 மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் மட்டுமே உருவாக்கப்பட்டன. 9 அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 700 மருத்துவப் பட்டப்படிப்பு இடங்களை அதிகரித்தும், ஆக மொத்தம் ஆயிரத்து 400 புதிய மருத்துவப் பட்டப்படிப்பு இடங்களை கடந்த 9 ஆண்டுகளில் உருவாகியுள்ளது.

2010-2011இல் 1945 ஆக இருந்த மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள், தற்போது மூன்றாயிரத்து 345 ஆக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து, அதிகளவில் தமிழ்நாட்டைச் சார்ந்த கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மாணவர்களின் மருத்துவர் ஆகும் கனவை நனவாக்கும்விதமாக, அதிமுக அரசு, குறுகிய காலத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, அரியலூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், திருப்பூர், நாமக்கல், கிருஷ்ணகிரிஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசின் ஒப்புதலை பெற்று, அவை அனைத்துக்கும் அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டுமான பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இதன்மூலம் வரும் ஆண்டுகளில் கூடுதலாக அயிரத்து 650 மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மாணவர்கள், குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் மருத்துவ கல்வி பயில்வதற்கு தடையாக இருக்கும் ‘நீட்’ தேர்வினை ரத்து செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு அரசு,தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

அரசு ‘நீட் தேர்வை’ நடத்தக் கூடாது என்று கொள்கை அளவிலும், சட்ட ரீதியாகவும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றது. எனவே, நீட் தேர்விற்கு எதிரான சட்டப் போராட்டத்தினை தொடர்ந்து நடத்தும் .

நான் 21.3.2020 அன்று சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மருத்துவ படிப்பில்இடம் கிடைக்காமல் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகக் கூடாது என்ற நோக்கத்தில்தான் அவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தேன்.

இது சம்பந்தப்பட்ட அனைத்து புள்ளி விவரங்களையும் தொகுத்து உரிய பரிந்துரையையும் தமிழ்நாடு அரசுக்கு வழங்க, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பி.கலையரசன் தலைமையின் கீழ் 21.3.2020 அன்றே ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. அவ்வாணையம் கடந்த 8.6.2020 அன்று தனது பரிந்துரையை தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பித்தது.

இந்த அறிக்கையின்படி, தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், சமூக, பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியவர்கள் என்பதும், அவர்களை பிற மாணவர்களுடன் ஒரே நிலையில் ஒப்பிட்டு தேர்வில் வகைப்படுத்துவது சமநீதிக்கு முரணானது என்றும், அதனால் அவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதே சமநீதியை நிலைநாட்ட வகை செய்யும் என்றும் ஆணையம் பரிந்துரை செய்தது.

மேலும், அரசு பள்ளிகளில் பயின்று, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு, அனைத்து இளநிலை மருத்துவப் பிரிவுகளிலும் உள்இட ஒதுக்கீடு வழங்கிட ஏதுவாக ஒரு சிறப்பு சட்டம் இயற்றிட அவ்வாணையம் பரிந்துரைத்தது.

கடந்த 15.6.2020 மற்றும் 14.7.2020 அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில், ஆணையத்தின் பரிந்துரை விவாதிக்கப்பட்டு, அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.அதன் அடிப்படையில், இந்தாண்டு முதல், மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 விழுக்காடு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து, அதையே சட்டமாக்க இந்த வரலாற்று சிறப்பு மிக்க சட்ட முன்வடிவினை அறிமுகம் செய்து, ஆய்வு நிலையில் உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் ஏழாயிரத்து 968 மேல்நிலைப் பள்ளிகளில், மூன்றாயிரத்து 054 பள்ளிகள், தமிழ்நாடு அரசின் சார்பில், நடத்தப்பட்டு வருகின்றன. இது 38.32 விழுக்காடாகும். தமிழ்நாட்டில் +2 பயிலும் 8 லட்சத்து 41 ஆயிரத்து 251 மாணவர்களில், 3 லட்சத்து 44 ஆயிரத்து 485 மாணவர்கள் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பயில்கின்றனர். இது 41 விழுக்காடாகும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள ஐந்தாயிரத்து 550 மொத்த மருத்துவஇடங்களில், மாநில அரசின் ஒதுக்கீடாக 4,043 இடங்கள் உள்ளன. இவற்றில் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களில் 0.15 விழுக்காடு மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவப் பட்டப்படிப்பு இடங்கள் கிடைக்கின்றன.

அரசு பள்ளி மாணவர்களும், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் வெவ்வேறு சமூக பொருளாதார பின்னணியை கொண்டவர்கள். இவர்கள் கற்கும் பள்ளி, வளரும் வீட்டுச் சூழல், பெற்றோர் வருமானம் போன்றவற்றில் வேறுபாடுகள் உள்ளன. எனவே, இவர்களை சமநிலையில் வைத்து பார்ப்பது சமநீதிக்கு எதிரானது.

தமிழ்நாடு அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் அவர்களுக்கு உரிய அளவுக்கு மருத்துவ இடம் கிடைப்பதில்லை.

எனவேதான், தமிழ்நாடு அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தனியாக உள் ஒதுக்கீடு அவசியமாகிறது என்பதை இத்தருணத்தில் தெளிவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளேன். தற்போதுள்ள மருத்துவ பட்டப்படிப்பு இடங்களில், இந்த 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்குவதால், சுமார் 300க்கு மேல் இடங்கள் ஏழை எளிய மாணவர்களுக்கு இதன்மூலம் சம நீதி வழங்க இது வழிவகுக்கும்.

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாடு அரசு பள்ளி மாணாக்கர்கள், அதாவது ஊராட்சி ஒன்றிய ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உட்பட / நகராட்சி / மாநகராட்சி /ஆதி திராவிடர் நலன் / பழங்குடியினர் நலன் /

பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, கள்ளர் சீர்மரபினர் / மாற்று திறனாளிகள் நலன் / வனம் / சமூக பாதுகாப்பு (சிறார் சீர்திருத்தப் பள்ளிகள்) ஆகிய துறைகளின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம்

வகுப்பு வரை பயின்ற மாணாக்கர்கள் மற்றும் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் (RTE), 2009-ன் கீழ் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று, பின்னர் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு, மருத்துவம், பல் மருத்துவ மற்றும் இந்திய மருத்துவ பட்டப்படிப்பு சேர்க்கையின் போது மாநில ஒதுக்கீட்டில் 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு (horizontal reservation) வழங்கவும்,மேற்படி இடஒதுக்கீட்டு முறையினை நீட் தகுதியின் அடிப்படையில் உள்ள அனைத்து பிரிவுகளுக்கும் (Courses)விரிவாக்கம் செய்யவும், மேலும், மேற்படி இட ஒதுக்கீட்டு முறையினை, அனைத்து மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி உள்ளடக்கிய அனைத்து அரசு கல்லூரிகளுக்கும் மற்றும் சுயநிதி கல்லூரிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட அனைத்து பிரிவு இடங்களுக்கும் பின்பற்றும் வகையிலான முறையில் இச்சட்ட முன்வடிவு வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்ட முன்வடிவை அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுமென்று பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாகக் கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.