ETV Bharat / state

பன்னிரெண்டாம் வகுப்பு மறுத்தேர்வு - 63 பேர் தேர்ச்சி!

சென்னை: பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 27ஆம் தேதி நடைபெற்ற மறுதேர்வில், 63 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

TN plus 2 arrears exam
பிளஸ் 2 மறுத்தேர்வு
author img

By

Published : Jul 31, 2020, 12:42 PM IST

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற தேர்வை கரோனா ஊரடங்கு காரணமாக சுமார் 35 ஆயிரம் மாணவர்களுக்கு மேல் எழுதவில்லை. இவர்களுக்கான மறுத்தேர்வு ஜூலை 27ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 147 பள்ளி மாணவர்கள், 372 தனித்தேர்வர்கள் என 519 பேர் எழுதினர்.

இதையடுத்து மறுத்தேர்வுக்கான முடிவு இன்று (ஜூலை 31) வெளியிடப்பட்டது. இதில் 92 பள்ளி மாணவர்கள், 88 தனித் தேர்வர்கள் குறிப்பிட்ட பாடத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

பள்ளி மாணவர்களில் 30 பேர், தனித்தேர்வர்கள் 33 பேர் என 63 பேர் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி அடைந்துள்ளனர் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு - 96.04 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.