துபாயிலிருந்து எமரேட்ஸ் சிறப்பு விமானம் இன்று காலை சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளைச் சுங்கத் துறையினர் சோதனையிட்டனர்.
அப்போது கேரளா மாநிலம் திரிசூரைச் சோ்ந்த முகமது செகில் (28) என்ற பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி சோதனையிட்டனா்.
அவருடைய உள்ளாடைக்குள் மறைத்துவைத்திருந்த ரூ.28.26 லட்சம் மதிப்புடைய 621 கிராம் தங்கத்தைப் பறிமுதல்செய்தனர். அத்தோடு பயணியைக் கைதுசெய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.
இதையும் படிங்க: ஹெராயின் கடத்திய இலங்கைப் படகு சிறைப்பிடிப்பு: 6 பேர் சிறையில் அடைப்பு