ETV Bharat / state

சென்னை வந்தடைந்த 6.98 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி - 6.98 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி

புனேவிலிருந்து விமானம் மூலம் ஆறு லட்சத்து 98 ஆயிரத்து 280 கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் இன்று சென்னை வந்தடைந்தன.

covid 19 vaccine
covid 19 vaccine
author img

By

Published : Jul 21, 2021, 6:09 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. இந்தப் பெருந்தொற்றைத் தடுக்க தடுப்பூசியே இப்போதைய பேராயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசி மருந்துகளை உடனடியாக வழங்கக்கோரி ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கைவைத்தார். அவரின் கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசும் தமிழ்நாட்டிற்குத் தடுப்பூசியை அனுப்பிவருகிறது.

கரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தடுப்பு முகாம்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

Covishield vaccine
கோவிஷீல்டு தடுப்பூசி

இந்நிலையில் தமிழ்நாட்டின் பல தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. புனேவிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 46 பார்சல்களில் ஐந்து லட்சத்து 42 ஆயிரத்து 280 கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன.

உடனடியாக சென்னை விமான நிலைய அலுவலர்கள் அவற்றைப் பெற்று, சுகாதாரத் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

Covishield vaccine
கோவிஷீல்டு தடுப்பூசி

அவா்கள் குளிா்சாதன வாகனங்களில் ஏற்றி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகம் கொண்டுசென்றனர். அங்கிருந்து தமிழ்நாடு முழுவதற்கும் தேவைக்கு ஏற்ப பிரித்து அனுப்பப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 13 பார்சல்களில் வந்த ஒரு லட்சத்து 56 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய மருந்துக் கிடங்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இதையும் படிங்க: தடுப்பூசி வழங்கக்கோரி உடையாம்பாளையம் கிராமத்தினர் சாலை மறியல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.