சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள மாநிலங்களவைத் 6 இடங்களுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 24ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் திமுக, காங்கிரஸ், அதிமுக மற்றும் சுயேட்சைகள் 7 பேர் உள்பட மொத்தமாக 13 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
கடந்த 1ஆம் தேதி நடைபெற்ற வேட்புமனு பரிசீலனை போது 7 சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் 3 ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டது.
இந்த கால அவகாசமும் முடிந்த நிலையில் திமுக வேட்பாளர்கள் தஞ்சாவூர் சு.கல்யாணசுந்தரம், இரா. கிரிராஜன்,கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோரும், காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரமும், இதே போல அதிமுக வேட்பாளர்கள் சி.வி.சண்முகம் மற்றும் தர்மர் ஆகியோர் போட்டியின்றி வெற்றி பெற்றதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டப்பேரவை செயலாளரும் தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசன் வெளியிட்டார்.
மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் இன்று(ஜூன்03) மாலை வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை பெற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் கமிஷனுக்கா செயற்கை மின் தட்டுப்பாட்டு... ஜெயக்குமார் குற்றச்சாட்டு...