இது குறித்து தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலர் அரசாணையில், "2019-2020ஆம் ஆண்டிற்கான பணிமாறுதல் மூலம் நியமனம் பெறும் துணை ஆட்சியர்களுக்கான தற்காலிகப் பட்டியல் அரசால் வெளியிடப்பட்டது.
அதன்படி, வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களுக்கான தகுதிகள் அனைத்தையும் பெற்றுள்ளார்கள் என்று சான்றளிக்கப்படுகிறது. தமிழ்நாடு குடிமைப்பணியில் பதவி உயர்வு மூலம் 57 வட்டாட்சியர்கள் தற்காலிகத் துணை ஆட்சியர்களாகப் பணிநியமனம் செய்யப்படுகின்றனர்.
வட்டாட்சியர்களை அவர்களது பணியிடத்திலிருந்து விடுவிக்கப்படும் முன்பாக அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் ஏதுமில்லை என்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் நிகழ்ச்சி - உயர் அலுவலர்கள் பங்கேற்பு