ETV Bharat / state

Tasmac closed: 500 டாஸ்மாக் கடைகள் மூடல்.. எந்தெந்த கடைகளை மூட அரசு திட்டம்?

author img

By

Published : Jun 21, 2023, 12:58 PM IST

Updated : Jun 21, 2023, 5:21 PM IST

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியினால், சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட டாஸ்மாக் மூடல் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

நாளையிலிந்து 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்படாது!டாஸ்மார்க் நிர்வாகம்

சென்னை: தமிழ்நாட்டில் நாளை (ஜூன் 22) முதல் 500 டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகள் மூடப்பட உள்ள நிலையில், இது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சென்னை மண்டலத்தில் 138 கடைகள் மூடப்பட உள்ளன. இதில் சென்னை வடக்கு பகுதியில் மொத்தம் உள்ள 100 கடைகளில் உள்ள 20 கடைகளும், சென்னை மத்திய பகுதியில் மொத்தம் உள்ள 93 கடைகளில் 20 கடைகளும், தென் சென்னை பகுதியில் மொத்தம் உள்ள 102 கடைகளில் உள்ள 21 கடைகளும் மூடப்பட உள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போக காஞ்சிபுரம் வடக்கு பகுதியில் 15 கடைகளும் மற்றும் தென் பகுதியில் 16 கடைகளும் மூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் திருவள்ளூர் கிழக்கு பகுதியில் 32 கடைகளும், மேற்கு பகுதியில் 14 கடைகளும் மொத்தம் சென்னை மண்டலத்தில் 138 கடைகள் மூடப்படவுள்ளன. இதனை தவிர மதுரை மண்டலத்தில் 125 கடைகளும், திருச்சி மண்டலத்தில் 100 கடைகளும் என தெரிவித்த டாஸ்மாக் நிர்வாகம் கோயம்புத்தூர் மண்டலத்தில் 78 கடைகளும், சேலம் மண்டலத்தில் 59 கடைகளும் மூடப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் 500 மதுக் கடைகள் மூடப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து இரு மாதங்களுக்கு மேலாகியும் அந்த அறிவிப்பு செயல்படுத்தப்படாமல் இருந்து வந்தது. சட்டப்பேரவையில் அறிவித்தவாறு மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தேன். அதன் பயனாக நாளை முதல் 500 மதுக்கடைகள் மூடப்படவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

இந்த மூடப்படவுள்ள கடைகள் குறித்து டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

  • குறைந்த சில்லறை விற்பனை மதுபான கடைகளும், கடைகள் நெருக்கமாக உள்ள பகுதிகளில் சில கடைகளும் மூடப்படும்
  • வழிபாட்டு தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் அமைந்துள்ள கடைகள்
  • நீண்ட நாட்களாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் கடைகள்
  • நீதிமன்ற வழக்கில் உள்ள கடைகள்
  • கட்டட உரிமையாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த கடைகள்

மேலும் மூடப்பட உள்ள மதுபான கடைகளில் பணிபுரியும் ஊழியர்களை பணியிட மாற்றம் செய்ய தனி உத்தரவு பிறப்பிக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடைகளை மூடும்போது, மது பாட்டில்கள் இருப்புகளை மீண்டும் குடோன்களுக்கு மாற்ற வேண்டும். மூடப்பட்ட கடைகளில் இருந்து உதவி மேலாளர்கள் அல்லது உதவி மேலாளர்கள் (கணக்குகள்) பணிமனை மேலாளர்களின் பதவிக்கு மாற்றப்படுவதை கண்காணிக்க ஒரு கண்காணிப்பு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். இது தொடர்பான நடவடிக்கைகள் மாவட்ட மேலாளர்களால் வழங்கப்பட வேண்டும் மற்றும் மூத்த மண்டல மேலாளர்களால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "செந்தில் பாலாஜியின் மருத்துவ கண்காணிப்பு குறித்து மருத்துவர்கள் தான் கூற வேண்டும்" - அமைச்சர் மா. சுப்பிரமணியன்!

Last Updated : Jun 21, 2023, 5:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.