ETV Bharat / state

கஞ்சா வாங்குவதற்காக பைக் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 5 பேர் கைது - two-wheeler theft

சென்னை: தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தை திருடியது விசாரணையில் அம்பலமாகியது.

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட சிறார் ஒருவர் உட்பட 5 பேர் கைது

author img

By

Published : Jul 29, 2020, 3:10 PM IST

சென்னை சோழிங்கநல்லூரை சேர்ந்த நபர்கள் கல்லூரியில் பொறியியல் படிக்கும் மாணவனின் உதவியோடு விலையுயர்ந்த புல்லட், கேடிஎம் போன்ற இருசக்கர வாகனங்களை திருடி அதன் உதிரி பாகங்களை பிரித்து ஆன்லைன் ஓ.எல்.எக்ஸ்சில் விற்று அதில் வரும் பணத்தை கொண்டு கஞ்சா, மது வாங்கி போதைக்கு பயன்படுத்தியுள்ளனர்.

சோழிங்கநல்லூரில் அடுத்தடுத்து விலையுயர்ந்த இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக தொடர்ந்து செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் வந்த வண்ணம் இருந்தது. இது தொடராக ஆய்வாளர் தலைமையில், தலைமை காவலர்கள் திருமுருகன், புஷ்பராஜ், தாமோதரன், முதல் நிலை காவலர் வினோத் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு இரவில் விலையுர்ந்த இருசக்கர வாகனங்களை திருடுவோரை தேட ஆரம்பித்தனர்.

சம்பவம் நடந்த இடங்களில் கைப்பற்றப்பட்ட சிசிசிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சோழிங்கநல்லூர் அருகே ஓடைப்பகுதி வரை செல்வது தெரியவந்தது. அதன்பிறகு எந்த சிசிடிவியிலும் பதிவாகவில்லை, அதனடிப்படையில் அப்பகுதியில் முழுவதும் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அங்கு தங்கியிருக்கும் ரூபேஷ்(21) என்பவர் திருட்டில் ஈடுபட்டதை கண்டு பிடித்தனர்.

அவரை வைத்து போலீசார் நவீன்(21) ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த ரூபன்ராஜ்(25), கல்லூரி மாணவன் அசோக் குமார், மற்றும் ஒரு சிறுவன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 7 விலையுயர்ந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் பிரித்த உதிரி பாகங்கள் ஆகியவை பறிமுதல் செய்யபட்டது.

அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் திருடிய இருசக்கர வாகனங்களை ஓடைப் பகுதியில் மறைவாக வைத்துவிட்டு ஆட்டோ மொபைல் படிக்கும் அசோக் மூலம் பாகங்களை பிரித்து ஆன்லைனில் விற்று வரும் பணத்தில் கஞ்சா, மது வாங்கி போதைக்கு அடிமையாகியது தெரியவந்தது.

சிறுவன் ஒருவரை தவிர அனைவரும் முதல் முறை குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

9 இருசக்கர வாகனங்களை சோழிங்கநல்லூர் பகுதியிலும் ஒரு இருசக்கர வாகனத்தை கண்ணகி நகரிலும் திருடி உள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவர் மீதும் செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்ப உள்ளனர்.

இதையும் படிங்க: எழுவர் விடுதலை தாமதம் ஏன்? உயர் நீதிமன்றத்தில் ஆளுநரின் பதிலை கூறிய தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.