சென்னை: இலங்கையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா ஆகிய இரு பயணிகள் விமானங்கள், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தன. அதில் வந்த பயணிகளை சென்னை விமான சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது இலங்கையைச் சேர்ந்த 4 இளம்பெண்கள், சுற்றுலாப் பயணிகள் விசாக்களில், இரு விமானங்களிலும் சென்னை வந்தனர். சுங்க அதிகாரிகளுக்கு அந்தப் பெண் பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களின் நிறுத்தி விசாரணை நடத்திநர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினார்கள்.
இதையடுத்து பெண் சுங்க அதிகாரிகள், 4 இலங்கை பெண் பயணிகளையும், தனி அறைகளுக்கு அழைத்துச் சென்று முழுமையாக சோதனை நடத்தினர். அப்போது அவர்களுடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த பார்சல்களில் தங்கப் பசைகள் மற்றும் தங்கச் செயின்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். 4 பெண் பயணிகளிடமும் ஒரு கிலோ 485 கிராம் தங்கப் பசை, தங்க செயின்கள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு ரூ. 80.42 லட்சம். இதையடுத்து, தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், 4 இலங்கை பெண் பயணிகளையும் கைது செய்தனர்.
இந்த நிலையில் அபுதாபியில் இருந்து எத்தியாட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சென்னையைச் சேர்ந்த 35 வயது ஆண் பயணி ஒருவர் மீது, சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: "ஆண்டுக்கு ரூ.4,680 கோடி ஊழல், இதுக்கு அதிமுகவே பரவாயில்லை" கொதிக்கும் லாரி உரிமையாளர்கள்..
அவரை நிறுத்தி உடைமைகளை சோதனை இட்டனர். உடைமைகளில் எதுவும் இல்லாத நிலையில் சுங்கத்துறையினர் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதித்த போது, அவருடைய காலனிக்குள் மறைத்து வைத்திருந்த பார்சலில் 518 கிராம் தங்க பசை இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ. 28.04 லட்சம் இதையடுத்து சுங்க அதிகாரிகள் அந்த பயணியையும் கைது செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் அடுத்தடுத்து நடத்திய சோதனைகளில், இலங்கை மற்றும் அபுதாபியில் நாடுகளில் இருந்து, சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 1.08 கோடி மதிப்புடைய 2 கிலோ தங்க பசை, தங்க செயின்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, இலங்கையைச் சேர்ந்த 4 பெண் பயணிகள், சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: கோடை வெப்பம் - உடல் சூட்டை குறைக்க மருத்துவர்கள் டிப்ஸ்!