சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து இரண்டு விமானங்கள் நேற்று (அக்.20) வந்தன. இரண்டு விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர்.
அப்போது அதில் வந்த 5 பயணிகள் மீது சந்தேகம் அடைந்து, அவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதில் மேலும் சந்தேகமடைந்த சுங்கத்துறை அலுவலர்கள் அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது உடைமைகளில் லேப்டாப், செல்போன் டேப்கள் மற்றும் உள்ளாடைகளில் ஐந்து கிலோ தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதன் சர்வதேச மதிப்பு 2.67 கோடி ஆகும். பொருட்களை பறிமுதல் செய்த அலுவலர்கள் ஐந்து பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மினி பஸ்ஸில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு - பதைபதைக்க வைக்கும் காணொலி!