ETV Bharat / state

சைதாப்பேட்டையில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 5 பேர் படுகாயம்! - chennai Cylinder blast

சென்னை சைதாப்பேட்டையில் கருணை இல்லத்திற்காக உணவு சமைக்கப்பட்ட சமையற்கூடத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 11, 2023, 1:34 PM IST

சென்னை: சைதாப்பேட்டை தீவன் பாஸியம் தெருவில் தொண்டு நிறுவனங்கள் மற்றும் கருணை இல்லத்திற்குச் சமையல் செய்யும் கூடம் அமைந்துள்ளது. நேற்று காலை கருணை இல்லம் ஒன்றிற்கு உணவு அளிப்பதற்காக 5-க்கும் மேற்பட்டோர் இக்கூடத்தில் சமைத்து கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் சைதாப்பேட்டை ஜோன்ஸ் தெருவை சேர்ந்த வனிதா(38), ஆட்டோ டிரைவர் புண்ணியகோடி(46), நித்யா(35), வாட்ச்மேன் ஆறுமுகம் (42), மற்றும் கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சர்ச் பாதிரியார் நித்தியானந்தம்(32) ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர்.

உடனே அங்கிருந்த பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் கிண்டி, மாம்பலம் பகுதியிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து 5 பேரை மீட்டு சிகிச்சைக்காக சைதாப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக 5 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் வனிதா மற்றும் புண்ணியகோடி ஆகிய இருவர் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இவ்விபத்து குறித்து சைதாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை சிலிண்டர் வெடித்த விபத்தில் படுகாயமடைந்த 5 பேரையும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்து சென்றார்.

இதையும் படிங்க: சென்னையில் கொசு தொல்லை.. ட்விட்டரில் பறந்த புகார்.. மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.