சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வும் அதிகரித்துள்ளதால், பற்றாக்குறையும் நிலவி வருகிறது. இதனால் உடனடியாக கூடுதல் தடுப்பூசிகளை வழங்குமாறு, ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனை ஏற்று ஒன்றிய அரசும், தமிழ்நாட்டிற்கு அதிகளவு தடுப்பூசிகளை அனுப்பி வருகின்றது. இந்நிலையில் இன்று (ஜூலை 28) புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 49 பார்சல்களில், 5 லட்சத்து 88 ஆயிரம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.
இவை உடனடியாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை அலுவலர்ளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் தடுப்பூசி பார்சல்களை குளிா்சாதன வாகனங்களில் ஏற்றி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா்.
இவை தமிழ்நாடு முழுவதும் தேவைக்கு ஏற்ப பிரித்து அனுப்பப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 1,756 பேருக்கு கரோனா