ETV Bharat / state

சென்னையில் நேற்று ஒரே நாளில் 4,772 வாகனங்கள் பறிமுதல்

சென்னை: இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்ட பின்பு, ஊரடங்கு விதிகளை மீறியதாக நேற்று ஒரே நாளில் 4,772 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 4,772 வாகனங்கள் பறிமுதல்
சென்னையில் நேற்று ஒரே நாளில் 4,772 வாகனங்கள் பறிமுதல்
author img

By

Published : May 20, 2021, 7:12 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊடரங்கு காலத்திலும் பொதுமக்கள் பலர் சாதாரண நாட்களைப் போலவே வெளியில் சுற்றி வந்தனர். இதனைத் தடுக்க 'இ-பதிவு' நடைமுறையை அரசு மீண்டும் கையில் எடுத்தது.

அதன்படி, மாவட்டங்களுக்குள் பயணம் செய்ய, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல 'இ-பதிவு' செய்ய வேண்டியது அவசியம் என்று அரசு உத்தரவிட்டது. அதிலும் சென்னையில் ஒரு சரக காவல் பகுதியிலிருந்து மற்றொரு சரக காவல் பகுதிக்கு செல்வதற்கு 'இ-பதிவு' கட்டாயமாக்கப்பட்டது. இதனையடுத்து, சென்னையில் சோதனைச் சாவடிகள் அதிகம் அமைக்கப்பட்டு காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (மே 19) சென்னையில் ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக 3502 வழக்குகள் பதிவு செய்து 4,772 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல முகக் கவசம் அணியாத 3,531 நபர்கள், தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்காத 358 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட 111 கடைகள் மூடப்பட்டு 8 லட்சத்து 96 ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக சென்னை காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையும் படிங்க: 'மனசாட்சிப்படி' என்று சொல்லி மீண்டும் முதலமைச்சராக பதவியேற்ற பினராயி விஜயன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.