ETV Bharat / state

44 வது செஸ் ஒலிம்பியாட்: 5 வது சுற்று நிலவரம் - பிரக்ஞானந்தா பின்னடைவு!

author img

By

Published : Aug 3, 2022, 9:08 AM IST

செஸ் ஒலிம்பியாட் போட்டியில், 5 வது சுற்றிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம் பிரக்ஞானந்தா முதல் தோல்வியை தழுவியுள்ளார்.

44 வது செஸ் ஒலிம்பியாட்: 5 வது சுற்று நிலவரம் - பிரக்ஞானந்தா முதல் பின்னடைவு!

சென்னை: 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி 2022, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய தினம் இந்திய அணிகள் 5 வது சுற்றில் விளையாடின.

ஓபன் A அணி Vs ரோமானியா : இந்திய வீரர் ஹரிகிருஷ்ணா - போக்டான் டேனியல் ஆடிய ஆட்டத்தில் (வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹரி, 0.5-0.5 என சமனில் முடித்தார். அடுத்ததாக விதித் சந்தோஷ் குஜராத்தி - கான்ஸ்டெண்டின் லுபுலெஸ்கு விளையாடும்போது, கருப்பு காய்களுடன் களம் கண்ட விதித், ஆட்டத்தை 0.5-0.5 என்ற கணக்கில் சமனில் முடித்தார்.

தொடர்ந்து அர்ஜூன் எரிகேசி - மிர்சியா எமிலியன் பார்லிகிராஸ் ஆடுகையில், வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன், 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். மேலும், எஸ்.எல். நாராயணன் - லாட் கிறிஸ்டியன் ஜியான் ஆடிய ஆட்டத்தில், கருப்பு நிற காய்களுடன் களம் கண்ட நாராயணன், 0.5-0.5 என்ற கணக்கில் ஆட்டத்தை சமனில் முடித்தார்.

சசிகிரண் மட்டும் ஓய்வு நிலையில் இருந்தார். இதனால் இந்திய ஏ அணி 2.5-1.5 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஓபன் B Vs ஸ்பெயின் : நேற்றைய முன்தினம் ஸ்பெயின் அணி, இந்தியா சி அணி உடன் விளையாடி, 2.5 - 1.5 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணியை தோற்கடித்தது. இதனைத்தொடர்ந்து நேற்றைய போட்டியில் இந்தியா ‘பி’ அணியுடன் மோதியது.

44 வது செஸ் ஒலிம்பியாட்: 5 வது சுற்று நிலவரம்

இதில், குகேஷ் - அலெக்சி ஷிரோவ் விளையாடும்போது, கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், 1-0 கணக்கில் வெற்றி பெற்றார். இதனையடுத்து சரின் நிஹல் - டேவிட் ஆண்டன் குய்ஜர் விளையாடுகையில், வெள்ளை நிற காய்களுடன் களமாடிய சரின், 0.5-0.5 என்ற புள்ளி கணக்கில் ஆட்டத்தை சமன் செய்தார்.

தொடர்ந்து பிரக்ஞானந்தா - சாண்டோஸ் லடாசா ஆடியபோது, கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 0-1 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவினார். அதேநேரம், அதிபன் - இடுரிஸாகா பொனெல்லி விளையாடுகையில், வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய அதிபன், 1-0 என்ற கணக்கில் வெற்றி அடைந்தார்.

இந்த சுற்றில் ரவுணிக் சத்வாணி ஓய்வில் இருந்தார். இதன் மூலம் இந்திய ஓபன் ‘பி’ அணி 2.5-1.5 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெற்றது. மேலும் இந்தத் தொடரில் பிரக்ஞானந்தா செஸ் ஒலிம்பியாட்டில் தனது முதல் தோல்வியை தழுவினார்.

ஓபன் C Vs சிலி : சூர்யா சேகர் கங்குலி - கிறிஸ்டோபல் ஹென்ரிக்யூஸ் வில்லாக்ரா விளையாடும்போது, கருப்பு நிற காய்களுடன் களம் கண்ட சூர்யா, 0.5-0.5 என்ற கணக்கில் ஆட்டத்தை சமன் செய்தார். இதனையடுத்து வெள்ளை நிற காய்களுடன் களமாடிய எஸ்.பி.சேதுராமன், இவான் மோரோவிச் ஃபெர்னாண்டஸை 1-0 கணக்கில் வெற்றி பெற்றார்.

தொடர்ந்து கார்த்திகேயன் முரளி - பாப்லோ ஹெர்ரேரா ஆடும்போது, கருப்பு நிற காய்களுடன் களம் கண்ட முரளி, 0-1 கணக்கில் தோல்வியைத் தழுவினார். அதேபோல், அபிமன்யு புராணிக் - ஹூகோ லோப் சில்வா விளையாடும்போது, வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அபிமன்யு, 1-0 புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார்.

இந்த அணியில் அபிஜித் குப்தா ஓய்வில் இருந்தார். இதன் மூலம் இந்திய ‘சி’ அணி 2.5-1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மேலும் 5 வது சுற்று ஆட்டத்தில், இந்திய ஓபன் பிரிவில் 3 அணிகளும் தலா 2.5 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய மகளிர் 'A' Vs பிரான்ஸ் : கொனெரு ஹம்பி - செபாக் மேரி விளையாடுகையில், கருப்பு நிற காய்களுடன் விளையாடிய ஹம்பி, 0.5-0.5 என்ற கணக்கில் ஆட்டத்தை சமன் செய்தார். இதனையடுத்து ஹரிகா துரோணோவள்ளி - சோஃபி மில்லெட் ஆடுகையில், வெள்ளை நிற காய்களுடன் களம் கண்ட ஹரிகா, ஆட்டத்தை 0.5-0.5 கணக்கில் சமன் செய்தார்.

தொடர்ந்து வைஷாலி - அனாஸ்டாசியா சவினா விளையாடும்போது, கருப்பு நிற காய்களுடன் விளையாடிய வைஷாலி, 0.5-.0.5 என்ற கணக்கில் ஆட்டத்தை சமன் செய்தார். அதேநேரம் தானியா சச்தேவ் - ஆன்ட்ரியா நவ்ரோடெஸ் ஆடும்போது, வெள்ளை நிற காய்களை நகர்த்திய தானியா 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

இந்த அணியில் பக்தி குல்கர்னி ஓய்வில் இருந்தார். இந்நிலையில் இந்திய பெண்கள் ‘ஏ’ அணி 2.5-1.5 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி அடைந்தது.

மகளிர் ‘B’ Vs ஜார்ஜியா : வந்திகா அகர்வால் - நானா சாக்னிட்சே விளையாடும்போது, வெள்ளை நிற காய்களுடன் களம் கண்ட வந்திகா, ஆட்டத்தை 0.5-0.5 கணக்கில் சமன் செய்தார். இதனையடுத்து கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பத்மினிராவத் - நினோ பட்ஷியாஷ்விலி, ஆட்டத்தை 0.5-0.5 என்ற கணக்கில் சமன் செய்தார்.

தொடர்ந்து சவுமியா சாமிநாதன் - லேலா ஜவாக்‌ஷிவிலி ஆடும்போது, வெள்ளை நிற காய்களுடன் களமாடிய சவுமியா, 0-1 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவினார். அதேபோல், திவ்யா தேஷ்முக் - மெரி அராபிட்ஸி விளையாடும்போது, கருப்பு நிற காய்களை நகர்த்திய திவ்யா, 0-1 கணக்கில் தோல்வியைத் தழுவினார்.

இந்த அணியில் கோமஸ் மேரி அன் ஓய்வில் இருந்தார். இந்த ஆட்டத்தில் ஜார்ஜியா அணி இந்திய பெண்கள் ‘பி’ அணியை 3-1 கணக்கில் தோற்கடித்தது.

மகளிர் ‘C’ Vs பிரேசில் : ஈஷா கரவாடே - ஜூலியா அல்பெரிடோ ஆடும்போது, வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஈஷா, 0.5-0.5 கணக்கில் ஆட்டத்தை சமன் செய்தார். இதனையடுத்து கருப்பு நிற காய்களுடன் விளையாடிய நந்திதா- லிப்ரெலாடோ கெத்தி கவுலர்ட், 1-0 என்ற கணக்கில் நந்திதா வெற்றி பெற்றார்

தொடர்ந்து பிரத்யுஷா போடா - ஜூலியானா சயுமி விளையாடும்போது, வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய போடா, 0-1 என்ற நிலையில் தோல்வியைத் தழுவினார். இதனையடுத்து விஷ்வா வஷ்ணவாலா - வனிசா ரமோஸ் கஸோலா ஆடும்போது, கருப்பு நிற காய்களுடன் விளையாடிய விஷ்வா, 0.5-0.5 கணக்கில் ஆட்டத்தை சமன் செய்தார்.

இந்த அணியில் சாஹிதி வர்ஷிணி ஓய்வில் இருந்தார். இதன் மூலம் இந்திய பெண்கள் ‘சி’ அணியும் பிரேசில் அணியும் 2-2 என்ற புள்ளிகளின்படி சமனானது.

இதையும் படிங்க: சென்னையில் செஸ் போர்டு போல் ஒரு டீக்கடை - குவியும் மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.