ETV Bharat / state

சென்னையில் இன்று ஒரே நாளில் 420 மருத்துவ முகாம்களில் கரோனா சோதனை - Chennai corporation

சென்னை முழுவதும் இன்று ஒரே நாளில் 420 மருத்துவ முகாம்களில்  14ஆயிரத்து 312 நபர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

420 Corona test medical camps in Chennai today

author img

By

Published : Jul 19, 2020, 10:54 PM IST

கரோனா வைரஸால் சென்னையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைகின்றனர். இருப்பினும் குணமடைந்தவர்களின் விழுக்காடும் அதற்கு சரி சமமாக உள்ளது. இந்த நோய்த்தொற்றை குறைப்பதற்காக மாநகராட்சியும் சுகாதாரத் துறையும் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்குவது கபசுர குடிநீர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தினமும் 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது .

மே எட்டாம் தேதி முதல் இன்று வரை மாநகராட்சி சார்பில் மொத்தம் 19 ஆயிரத்து 571 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன. அதில் 11 லட்சத்து 95 ஆயிரத்து, 517 நபர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பரிசோதிக்கப்பட்டவர்களில் 13 ஆயிரத்து 122 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் , இன்று தண்டையார்பேட்டை 53 தேனாம்பேட்டையில் 51 , திருவிக நகரில் 45 மருத்துவ முகாம் என மொத்தம் 420 மருத்துவ முகாம்கள் நடைபெற்றன என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற 420 மருத்துவ முகாம்களில் மொத்தம் 14ஆயிரத்து 312 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். அதில் ஆயிரத்து 74 நபர்களுக்கு தொற்று அறிகுறி இருந்ததால் அருகில் உள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.