சென்னை விமான நிலையத்தில் இருந்து 42 உள்நாட்டு விமான சேவைகள் இன்று இயக்கப்படுகின்றன. அதன்படி, சென்னையிலிருந்து டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், புவனேஸ்வா், அந்தமான், விஜயவாடா, கொச்சி, பெங்களூரு, மதுரை, திருச்சி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கு 21 விமான புறப்படுகின்றன.
அதேபோல், அந்தந்த நகரங்களிலிருந்து சென்னைக்கு 21 விமானங்கள் வருகின்றன. சென்னையிலிருந்து புறப்படும் விமானங்களில், பயணிகளின் எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது. மொத்தம் புறப்படக்கூடிய 21 விமானங்களில் சுமாா் 2,400 பயணிகள் செல்கின்றனர். குறிப்பாக, அதில் புவனேஸ்வா், அந்தமான், கவுகாத்தி, கொல்கத்தா நகரப்பயணிகள் அதிகம்.
ஆனால் சென்னைக்கு வரும் விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. வரக்கூடிய 21 உள்நாட்டு விமானங்களில் சுமாா் ஆயிரம் பயணிகள் மட்டுமே வருகின்றனா். அதற்கு காரணம் சென்னையில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால்தான் என விமான நிலைய அலுவலர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: டெல்லியிலிருந்து மதுரை வந்த ராணுவ வீரருக்கு கரோனா