காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே சைல்டு ஹெவன் இன்டர்நேஷனல் ஹோம் என்ற தனியார் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டுவருகிறது. இந்தக் காப்பகத்தில் 76 குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் ஜூன் 25 அன்று நான்கு பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதை அடுத்து மானாமதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இதனையடுத்து நேற்று முன்தினம் (ஜூன் 26) காப்பகத்தில் உள்ள அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களின் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன.
நேற்று வந்த பரிசோதனை முடிவில் 40 குழந்தைகளுக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
கரோனா மூன்றாவது அலை குழந்தைகளைப் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறும் நிலையில் தற்போது தனியார் குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் சற்று பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 21 மாவட்டங்களில் சதமடித்த பெட்ரோல்!