ETV Bharat / state

8 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட காவல் துறையினர்; குவியும் பாராட்டுகள்! - எட்டு மணிநேரத்தில் மீட்ட போலீசார்

சென்னை: சென்னையில் குழந்தை கடத்தப்பட்டு எட்டு மணி நேரத்தில் மீட்ட காவல் துறையினருக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

police
author img

By

Published : Jul 23, 2019, 8:47 AM IST

சென்னை அமைந்தகரையில் காணாமல்போன நான்கு வயது குழந்தையை 8 மணி நேரத்தில் காவல் துறையினர் மீட்டனர். குழந்தையின் பெற்றோர், காவல் துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், கூடுதல் ஆணையர்கள் தினகரன், பிரேம் ஆனந்த் சிங்கா உட்பட பல்வேறு காவல் அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், குழந்தையை 8 மணி நேரத்தில் மீட்கப் போராடிய காவல் துறையினருக்கு காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பாராட்டினார். பின்னர் அவர் பேசுகையில், "இந்தியாவில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் சென்னை மாநகரம் முதன்மையாக இருக்கிறது. 8 மணி நேரத்தில் குழந்தையை மீட்கும் வல்லமை பெற்ற காவலர்கள் சென்னையில் இருப்பதே அதற்குக் காரணம். பணிப்பெண்களை நியமிக்கும்போது அவர்களின் முழு விவரங்கள் பற்றி ஆராயவேண்டும். அவர்களின் மேல் ஏற்கெனவே வழக்குகள் ஏதேனும் உள்ளதா என்று காவல்துறையை அணுகி விசாரித்து கொள்ள வேண்டும்" என்றார்.

எட்டு மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீசார்; குவியும் பாராட்டு!

அடுத்து குழந்தையை மீட்ட அனுபவம் குறித்து காவலர்கள், தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். பின்னர், காவலர்களுக்கு நன்றியும், வாழ்த்தும் தெரிவித்து குழந்தையின் தந்தை அருள்ராஜ் பேசினார்.

குழந்தை கடத்தப்பட்டு எட்டு மணி நேரத்தில் மீட்ட காவல் துறையினருக்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

Intro:Body:பணிப்பெண்களை நியமிக்கும் போது காவல்துறை உதவியை நாடலாம் என காவல் ஆணையர் பேச்சு..

சென்னை அமைந்தகரையில் காணாமல் போன 4வயது குழந்தையை 8மணி நேரத்தில்  மீட்ட காவல்துறையை  சிறுமியின் பெற்றோர்கள் காவல் ஆணையரை சந்தித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது..

இதில் காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன், கூடுதல் ஆணையர்கள் தினகரன்,பிரேம் ஆனந்த் சிங்கா உட்பட பல்வேறு காவல் அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்..

இதில் சிறுமியை 8மணி நேரத்தில் மீட்க போராடிய காவல்துறையினருக்கு காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் பாராட்டினார்.மேலும் சிறுமியை மீட்க போராடிய காவலர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய சிறுமியின் பெற்றோர் அருள்ராஜ் தன் குழந்தையை 8மணி நேரத்திற்குள் மீட்ட காவல்துறையினருக்கு தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்தார்.மேலும் தன்னுடைய குழந்தைக்காக 8தனிப்படை அமைத்து மீட்க போராடிய காவல்துறையினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

பின்னர் மேடையில் பேசிய காவல் ஆணையர் ஏ.கே விசுவநாதன்.

இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் சென்னை மாநகரம் முதன்மையாக இருக்க காரணம் 8மணி நேரத்தில் சிறுமியை மீட்க போராடிய காவலர்கள் போல் சென்னையில் இருப்பதால் தான் எனவும் பணிப்பெண்களை நியமிக்கும் போது அவர்களின் முழு விவரங்கள் பற்றி ஆராயவேண்டும் எனவும் அவர்களின் மேல் ஏற்கெனவே வழக்குகள் ஏதேனும் உள்ளதா என காவல்துறையை அனுகி விசாரித்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.மேலும் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு தன்னுடைய பாராட்டுகளையும் தெரிவித்தார்..
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.