ETV Bharat / state

நட்சத்திர விடுதியில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 4 பேர் கைது - chennai crime news

எழும்பூர் நட்சத்திர விடுதியில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தை தட்டிக் கேட்ட நபர்களை, தாக்கிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 21, 2023, 6:05 PM IST

சென்னை: சென்னையைச் சேர்ந்தவர் சுரேஷ்(30) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பிரபல நட்சத்திர ஹோட்டலில் பார் மேனேஜராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் சுரேஷ் தனது நண்பரான சிவா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் ஒரு பெண் தோழியுடன் எழும்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் பாருக்கு மது அருந்த வந்துள்ளார்.

பின்னர் மூவரும் மது அருந்தி விட்டு பாரில் நடனம் ஆடியுள்ளனர். அப்போது அங்கிருந்த சிலர் சிவாவின் பெண் தோழியான இளம் பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்ட சுரேஷ் மற்றும் சிவா ஆகியோர் அவர்களை தட்டிக் கேட்ட போது, சுமார் 8 நபர்கள் ஒன்றிணைந்து சுரேஷ் மற்றும் சிவா உள்ளிட்ட இருவரையும் தாக்கியுள்ளனர். பின்னர் மது பாட்டிலை எடுத்து சுரேஷ் தலையில் தாக்கி உள்ளனர்.

இந்த மோதலில் காயமடைந்த சுரேஷ் சிகிச்சைக்காக தனியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சுரேஷ் எழும்பூர் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து நான்கு பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'ஓய்... நானா இறந்துட்டேன்' - வீடியோ வெளியிட்டு வதந்தி குறித்து கர்ஜித்த பிரபல நடிகர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.