ETV Bharat / state

ஆந்திரா தங்க நகை வியாபாரி வழக்கு: 4 ஈரானிய கொள்ளையர்கள் கைது! - Andhra Jewelry dealer Jewel Theft Case

சென்னை: ஆந்திரா தங்க நகை வியாபாரியிடம் 4.3 கிலோ தங்கம் பறித்துச் சென்ற வழக்கில் 4 ஈரானிய கொள்ளையர்கள் மத்தியப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

4 ஈரானிய கொள்ளையர்கள் கைது ஆந்திரா நகை வியாபாரி நகை பறிப்பு வழக்கு சென்னை ஈரானிய கொள்ளையர்கள் நகை பறிப்பு வழக்கு 4 Iranian Roberrs Arrest Andhra Jewelry dealer Jewel Theft Case Chennai Iranian Roberrs Jewel Theft Case
4 Iranian Roberrs Arrest
author img

By

Published : Jan 18, 2020, 10:22 PM IST

ஆந்திராவைச் சேர்ந்த நகை வியாபாரி தினேஷ். இவர் கடந்த வாரம் சென்னை செளகார்பேட்டையில் தங்கம் வாங்க வந்துள்ளார். அப்போது, நான்கு பேர் கொண்ட் கும்பல் டெல்லி காவல் துறையினர் போல் நடித்து, அவரிடமிருந்து 4.3 கிலோ கிராம் தங்கத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்து தினேஷ் அளித்த புகாரின் பேரில் யானைகவுனி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், கொள்ளையடித்த நான்கு பேரும் மத்தியப் பிரேதசத்தில் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த 12ஆம் தேதி தனிப்படை காவல் துறையினர் மத்தியப் பிரதேசத்திற்கு விரைந்தனர். அங்கு மத்தியப் பிரதேச காவல் துறையினர் உதவியுடன் வீட்டில் பதுங்கியிருந்த நான்கு பேரை தழிழ்நாடு காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து சுமார் 1 கிலோ 700 கிராம் தங்கத்தையும், 1 லட்சத்து 10ஆயிரம் ரூபாய் பணம், 10 செல்ஃபோன் உள்ளிட்டவைகளையும் காவல் துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், கொள்ளையில் ஈடுபட்டது மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஈரானிய கொள்ளையர்கள் மெஹந்தி ஹுசைன், அபுஹைதர் அலி, சாதிக், ஆசன் அலி ஆகியயோர் என்பது தெரிய வந்தது.

கைது செய்யபட்ட கொள்ளையர்கள்

மேலும் அவர்கள் மீது கோயம்புத்தூர், மதுரை போன்ற பல்வேறு காவல் நிலையத்தில் கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது. சென்னை பூக்கடை காவல் நிலையத்திலும் இதே கும்பல் கவனத்தைத் திசை திருப்பி கொள்ளையடித்ததால் மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து, அவர்களை மத்தியப்பிரதேசத்திலிருந்து சென்னைக்கு அழைத்து வந்து, யானைகவுனி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:

கொலையில் முடிந்த கபடி விளையாட்டு

Intro:Body:ஆந்திரா தங்க நகை வியாபாரியிடம் 4.3 கிலோ தங்கம் பறித்து சென்ற வழக்கில் 4 ஈரானிய கொள்ளையர்களை மத்திய பிரதேசத்திற்கு சென்று போலீசார் கைது செய்துள்ளனர்*

சென்னை செளகார்பேட்டையில் தங்கம் வாங்க வந்த ஆந்திராவைச் சேர்ந்த தினேஷ் என்பவரிடம் டெல்லி போலீசார் போல 4பேர் நடித்து 4.3 கிலோ தங்கத்தை கடந்த வாரம் பறித்து சென்றனர்.

இது தொடர்பாக தினேஷ் அளித்த புகாரின் பேரில் யானைகவுனி போலீசார் வழக்குபதிவு செய்து 4கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கொள்ளையடித்த 4பேரும் மத்திய பிரேதசத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த 12ஆம் தேதி தனிப்படை போலீசார் மத்திய பிரதேசத்திற்கு விரைந்தனர்.பின்னர் மத்திய பிரதேச போலீசார் உதவியுடன் வீட்டில் பதுங்கியிருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து சுமார் 1கிலோ 700 கிராம் தங்கத்தையும்,1லட்சத்து 10ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 10 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.பின்னர் விசாரணையில்
மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஈரானிய கொள்ளையர்கள் மெஹந்தி ஹுசைன், அபுஹைதர் அலி, சாதிக், ஆசன் அலி , ஆகிய 4பேர் என்பது தெரியவந்தது.மேலும் இவர்கள் மீது கோயம்புத்தூர்,மதுரை போன்ற பல்வேறு காவல் நிலையத்தில் கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.மேலும் சென்னை பூக்கடை காவல் நிலையத்திலும் இதே கும்பல் கவனத்தை திசை திருப்பி கொள்ளையடித்த 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர்களை மத்திய பிரதேசத்தில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டு யானைகவுனி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.