ETV Bharat / state

ஏசி, சொட்டுநீர் பாசனம் அமைத்து கஞ்சா செடிகள் வளர்த்த என்ஜினியர் - 4 பேர் சிக்கியது எப்படி?

author img

By

Published : Mar 4, 2023, 8:38 AM IST

வீட்டிலேயே LED விளக்குகள், ஏசி, மின்விசிறிகளுடன் சொட்டுநீர் பாசனம் மூலம் கஞ்சா செடிகளைப் பயிரிட்டு விற்பனை செய்து வந்தவர் உள்ளிட்ட 4 பேரை சென்னையில் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த 356 போதை ஸ்டாம்புகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

ஏசி, மின்விசிறி, சொட்டுநீர் பாசனம் அமைத்து கஞ்சா செடிகள் வளர்ப்பு - 4 பேர் போலீசாரிடம் சிக்கியது எப்படி?

சென்னை: வாடகைக்கு வீடு எடுத்து சூரிய ஒளி படாமல் சொட்டுநீர் பாசனம் அமைத்தும், LED விளக்குகள், ஏசி, மின்விசிறி உள்ளிட்ட அனைது வசதிகளை ஏற்படுத்தி கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்து வந்த பொறியாளர், ரயில்வே ஊழியர் உட்பட நான்கு பேரை சென்னை போலீசார் கைது செய்தனர்.

மேலும், கேளிக்கை விடுதிகளில் போதை ஸ்டாம்புகள் விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க சென்ற போது, வெளிநாடுகளில் இருந்து கிரிப்டோகரன்சி மூலமாக டார்க் வெப்சைட்களில் போதை ஸ்டாம்புகளை வாங்கி சென்னையில் விற்பனை செய்து வந்ததை போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.

சென்னையில் உள்ள ரிசார்டுகள், பப்புகள் போன்ற கேளிக்கை விடுதிகளில் விலையுயர்ந்த போதை ஸ்டாம்புகள் விற்கப்படுவதாக வடக்கு கடற்கரை உதவி ஆணையரின் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. அதன் அடிப்படையில் போலீசார், தீவிர விசாரணை நடத்தினர்.

பட்டாளம் பகுதியை சேர்ந்த நரேந்திர குமார் என்பவரிடம் LSD ஸ்டாம்ப் போதைப் பொருள் வாங்குபவர் போல தனிப்படை போலீசார் நடித்து ஒரு ஸ்டாம்பு 1,200 ரூபாய் என விலை பேசி உள்ளார். மேலும் வாங்குவது போலீஸ் என அடையாளம் தெரியாத நரேந்திர குமார் 100 ஸ்டாம்புகளை 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு என விலைப் பேசியும் உள்ளார்.

விலைப் பேசிய உடன் பணத்தோடு வந்த நபரை அழைக்கழித்த நரேந்திர குமார், கடைசியாக ஆழ்வார் திருநகர் பகுதியில் ஒரு வீட்டிற்கு வரவழைத்து, பணத்தை கண்ணில் காட்டும் படி கூறியுள்ளனர். பணத்தை காட்டியதும், 100 LSD ஸ்டாம்புகளை கொடுத்ததுள்ளார். மறைந்து இருந்த தனிப்படை போலீசார் நரேந்திர குமார் உள்பட இரண்டு பேரை கைது செய்தனர்.

பிடிபட்ட மற்றொருவர் ஆழ்வார் திருநகரை சேர்ந்த ஷ்யாம் என்பது தெரியவந்துள்ளது. மேலும், ஷ்யாமிடம் விசாரணை மேற்கொண்டதில் தாம்பரம் சேலையூர் அருகே உள்ள மாடம்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சக்திவேல் என்பவர் தான் தனக்கு ஸ்டாம்புகளை கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அங்கு சென்ற போலீசார் சக்திவேலை கைது செய்தனர். மேலும் அவனது வீட்டை சோதனை செய்தபோது, வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதைக் கண்ட போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதனைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

முக்கிய நபரான சக்திவேல், சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருவதும், இணையதளம் பற்றிய நல்ல அறிவு கொண்டவர் என்பதும் தெரியவந்தது. வேலையில் சம்பாதித்த பணத்தை சக்திவேல் கிரிப்டோகரன்சியாக மாற்றி டிரேடிங் பிஸ்னஸ் செய்து வந்துள்ளார். தொழிலில் நஷ்டம் அடைந்ததால் சக்திவேல் குறுக்குவழியில் பணம் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளார்.

மேலும் நட்சத்திர விடுதியில் பார்டிக்கு சென்ற போது , அங்கு போதை ஸ்டாம்பு மற்றும் கஞ்சாவிற்கு அதிக மவுசு இருப்பதை தெரிந்து கொண்டதாகவும், அதனைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டுள்ளார். LSD ஸ்டாம்ப் பற்றியும், அவற்றை எங்கிருந்து எல்லாம் வாங்குவது பற்றியும் யூடியூப் போன்ற இனையதளங்கள் மூலமாக அறிந்து கொண்டுள்ளார்.

மேலும், போலீசாரிடம் சிக்காத படி, பல யுக்திகளை கையாண்ட சக்திவேல், கஞ்சா வளர்த்து விற்பனை செய்ய திட்டமிட்டு, வீட்டிலேயே சொட்டுநீர் பாசனம் செய்வது குறித்தும் யூடியூப்பில் பார்த்து கற்றுக் கொண்டுள்ளார். அதற்கான உபகரணங்களையும் ஆன்லைன் மூலமாக வாங்கிய அவர், பின்னர் கிரிப்டோகரன்சி மூலமாக டார்க் வெப்சைட்டில் வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் LSD STAMP மற்றும் கஞ்சா வளர்க்கக்கூடிய உபகரணங்கள் மற்றும் விதைகளை கொரியர் மூலமாக வாங்கி வந்து மாடம்பாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வீட்டிலேயே விலையுயர்ந்த கஞ்சா செடி மற்றும் தேவைப்படும் நபர்களுக்கு போதை ஸ்டாம்புகளையும் விற்பனை செய்து வந்துள்ளார்.

குறிப்பாக, பக்கத்து வீட்டாருக்கு சந்தேகம் வராத படியும், நாற்றம் வராமலும் அதி நவீன உபகரணங்கள் மூலமாக சூரிய ஒளிபடாமல் கஞ்சா செடி வளர்த்து வந்ததும், சொட்டு நீர் பாசன முறைப்படி சிறு மோட்டார்கள் மூலமாக கஞ்சா செடிகளுக்கு குறிப்பிட்ட நேரங்களில் நீர்ப்பாய்ச்சும் வகையில் வடிவமைத்துள்ளார்.

மேலும், இந்த அறையில் உள்ள மின்விளக்குகள், ஏசி, மின் மோட்டார்களை செல்போன் மூலமாக இயக்கும் வகையில் வடிவமைத்து இருப்பதும் தெரியவந்தது. ஆய்வகம் போல, அமைத்து கஞ்சாவை பறித்து உலரவைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதேபோல, 7-க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளை சக்திவேல் வீட்டில் வளர்த்து வந்துள்ளார்.

போதை ஸ்டாம்புகளையும், கஞ்சாவையும் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்வதற்காக சக்திவேல் ரயில்வே ஊழியர் சியாம் சுந்தர், நரேந்திரகுமார், ஸ்ரீகாந்த் ஆகியோரை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. குறிப்பாக, ஒரு கிராம் கஞ்சாவை 1,000 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும், கேளிக்கை விடுதிகளுக்கு செல்வோருக்கும் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதேபோல, கடந்த 4 வருடமாக வீட்டிலேயே கஞ்சா செடி வளர்த்து சக்திவேல் விற்பனை செய்து வந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், போதை ஸ்டாம்புகளை 600 ரூபாய்க்கு வெளிநாடுகளில் வாங்கி, நட்சத்திர விடுதிகள் மற்றும் பப்புகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ரூ.2,500 வரை இந்த கும்பல் விற்பனை செய்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இவர்களிடமிருந்து 10-க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள், 356 போதை ஸ்டாம்புகள் மற்றும் 3 கிலோ கஞ்சா ஆகியவற்றை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சக்திவேலின் வீட்டிற்கு போலீசார் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்திய நிலையில் அங்கு இருந்து கணினி போன்ற பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் வங்கி பரிவர்த்தனை மூலமாகவும், கணினி, செல்போன் தொடர்புகளில் ஆய்வு செய்தும் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா செடி வளர்த்தும், போதை ஸ்டாம்ப் விற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: உ.பி.யில் உயிருக்கு போராடிய ஆமையை ஆப்ரேஷன் செய்து காப்பாற்றிய மருத்துவரும் உரிமையாளரும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.