ETV Bharat / state

கரோனா: தமிழ்நாடு அரசின் மூன்றாம் கட்ட ஆய்வு - sero survey result

சென்னை: கரோனோவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி எத்தனை நபர்களுக்கு உருவாகியுள்ளது என்பதை கணக்கிடுவதற்கான தமிழ்நாடு சுகாதாரத் துறையின் மூன்றாவது கட்ட ஆய்வு தொடங்கியுள்ளது.

3rd-phase-sero-survey-started-yesterday-in-tamilnadu
3ஆம் கட்ட கரோனா சீரோ சர்வே தமிழ்நாட்டில் தொடக்கம்
author img

By

Published : Jun 29, 2021, 7:25 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 46 சுகாதார மாவட்டங்களில், 888 நோய் பாதிக்கப்பட்ட இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு, கரோனா தொற்று பாதித்த நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதா என்பது குறித்த இரண்டாம் கட்ட ஆய்வு தமிழ்நாடு சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தலைமையில் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதற்கிடையே, சென்னையைத் தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தொற்று அதிகம் பாதித்த 765 இடங்களில் 22,905 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

கிராமம், நகர்ப்புறங்களில் உள்ள தெருக்களில் குறைந்தது 30 பேர்களிடம் ரத்த மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், 22,094 நபர்களிடமிருந்து பெறப்பட்டதில், 5,316 பேருக்கு (23%) மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் 49 விழுக்காட்டினருக்கும், குறைந்தபட்சம் நாகை மாவட்டத்தில் 9 விழுக்காட்டினருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியப்பட்டது.

முதல் கட்ட சர்வே முடிவுகள்

கரோனா நோய் எதிர்ப்பு சக்தி குறித்த முதல் ஆய்வு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்பட்டது. அப்போது, 22,690 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் தமிழ்நாட்டில் 31 விழுக்காட்டினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டது. அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 49 விழுக்காட்டினருக்கும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 13 விழுக்காட்டினருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரியவந்தது.

இரண்டாவது கட்ட நோய் எதிர்ப்பு சக்தி கண்டறிவதற்கான சர்வே கடந்தாண்டு நவம்பர் முதல் மார்ச் வரையிலான காலத்தில் சர்வே எடுக்கப்பட்டது. முதல் கட்ட ஆய்வில் 31 விழுக்காட்டினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருந்த நிலையில், இரண்டாம் கட்ட ஆய்வில், அது 23 விழுக்காடாக குறைந்தது. புதுவகை கரோனாவல் இந்த விழுக்காடு குறைந்திருக்கலாம் என வல்லுநர்கள் தெரிவித்தனர்.

தற்போது தினசரி தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு, உருமாறிய கரோனா வைரஸ் பாதிப்புகள் ஆகியவை கண்டறியப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது கட்ட ஆய்வு நேற்று தொடங்கப்பட்டுள்ளது.

கரோனா நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியும் சர்வேயில், கரோனா தடுப்பூசி, வைரஸை எதிர்கொள்ளும் சக்தியை அதகரித்ததா? உருமாறிய வகை வைரஸ் பாதிப்புகள் தாக்கம் என்ன? என்பது குறித்த ஆய்வை சுகாதாரத் துறை செய்யவிருக்கிறது.

இதையும் படிங்க: கரோனா சீரோ சர்வே முடிவுகள் நம்பிக்கை அளிக்கிறது - ரன்தீப் குலேரியா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.