சென்னை: ஐஐடியின் தொழில் நிறுவனமான த்வஸ்தா கட்டுமானத்தில் 3டி பிரிண்டிங்கில் தேசியமயமாக்கப்பட்ட கப்பல் கட்டும் நிறுவனமான கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் (ஜிஆர்எஸ்இ) லிமிடெட் நிறுவனத்தில், கொல்கத்தாவின் முதல் 3டி பிரிண்டட் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.
இதனை இந்திய அரசின் பாதுகாப்புச்செயலர் ஸ்ரீ கிரிதர் அரமனே திறந்து வைத்தார். 3டி பிரிண்டிங்கில் அச்சிடப்பட்ட தள அலுவலகத் திட்டம், தொழில்நுட்ப விளக்கமாக உருவாக்கப்பட்டு, நீர் மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போரைக் கண்காணிக்க கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தால் பயன்படுத்தப்படும்.
3டி அச்சிடப்பட்ட தள அலுவலகம் 180 சதுர அடி பரப்பளவில் 10 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில் 6 முதல் 8 பேர் வரை வேலை செய்யும் வகையில் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. சென்னையில் உள்ள த்வஸ்தா தொழிற்சாலையில் 2.5 நாட்களில் கட்டமைப்பின் கட்டடப்பிரிவுகள் அச்சிடப்பட்டன. இது தொகுதிகள் வடிவில் தள இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு விரைந்து கட்டுமானப் பகுதிகள் அடுக்கப்பட்டு, கட்டமைப்பு இறுதி செய்யப்பட்டது. கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் (ஜிஆர்எஸ்இ) லிமிடெட் நிறுவனம், இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு இதுவரை 108 போர்க்கப்பல்களை வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: நிலத்தகராறில் உறவினர் வெறிச்செயல்: தருமபுரியில் தாய், மகன் கொலை!