சென்னை: தமிழ்நாடு கூட்டுறவு நிறுவனங்களில் முறைகேடில் ஈடுபட்ட 811 சங்கங்களில் ரூ.365 கோடி மதிப்புல்ள சொத்துக்களை முடக்கியுள்ளதாக கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக முடக்கி வைக்கப்பட்ட சொத்துக்களை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
தொடர்புடைய சங்கங்கள் அனைத்திலும் உள்ள நிர்வாக்குழு கலைக்கப்பட்டும், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டும், தொடர்புடைய நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் பணிகளும் முடிவடைந்துள்ளன. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2,755 கோடியில் தள்ளுபடி வழங்கும் நடவடிக்கைகள் தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அரசியலில் இருந்து விலகலா..? பழனிவேல் தியாகராஜன் அளித்த புதுவிளக்கத்தின் பின்னணி