ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 34 பேருக்கு கரோனா பாதிப்பு! - corona

தமிழ்நாட்டில் மேலும் 34 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பு
கரோனா பாதிப்பு
author img

By

Published : May 17, 2022, 10:36 PM IST

சென்னை: பொதுசுகாதாரத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள கரோனா பாதிப்பு அறிக்கையில், ’தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 573 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 34 நபர்களுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 6 கோடியே 52 லட்சத்து 53 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு , 34 லட்சத்து 54 ஆயிரத்து 686 நபர்களுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது 324 பேர் மருத்துவமனைகளிலும் , தனிமைப்படுத்தும் மையங்களிலும் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் பொது சுகாதாரத் துறை இயக்குநரக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னையில் 17 நபர்களுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 நபர்களுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 நபர்களுக்கும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3 பேருக்கும், ஈரோடு , கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபர் என 34 பேரும் கரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா காலத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் கைவிடப்படுவதாக டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.