ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 332 பேருக்கு கரோனா பாதிப்பு! - today corona positive count

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு 23 மாவட்டங்களில் பரவலாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 171 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு!
கரோனா பாதிப்பு!
author img

By

Published : Jun 14, 2022, 10:42 PM IST

சென்னை: பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் ஜூன் 14 ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், 'தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 11,030 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறிவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் மகாராஷ்டிராவில் இருந்து வந்த ஒருவர் உட்பட தமிழ்நாட்டின் மேலும் 331 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான பரிசோதனை தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 56 லட்சத்து 31 ஆயிரத்து 427 நபர்களுக்கு செய்யப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் 34 லட்சத்து 57 ஆயிரத்து 969 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரியவந்தது.

அவர்களில் தற்போது மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் ஆயிரத்து 632 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள் குணமடைந்து 153 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 18 ஆயிரத்து 312ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 171 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 66 நபர்களுக்கும் கோயம்புத்தூரில் 23 நபர்களுக்கும் திருவள்ளூரில் 16 நபர்களுக்கும் கன்னியாகுமரியில் 10 நபர்களுக்கும் என 23 மாவட்டங்களில் வைரஸ் தொற்று பாதிப்பு வரத் தொடங்கியுள்ளது.

வைரஸ் தொற்று கண்டறிவதற்கான பரிசோதனை செய்பவர்களில் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை மாநில அளவில் 2.1 உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 5.2 சதவீதம் பேருக்கும் செங்கல்பட்டில் 5.1 சதவீதம் பேருக்கும் நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 5 நாள் போராட்டம்... ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை நெருங்கிய மீட்புக்குழு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.