தமிழ்நாட்டில் இன்று 3 ஆயிரத்து 713 பேருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், கரோனா பாதிப்பு எண்ணிக்கை 78 ஆயிரத்து 335ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஆயிரத்து 939 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்முலம் சென்னையில் கரோனா பாதிப்பு 51 ஆயிரத்து 699ஆக உயர்ந்துள்ளது. கண்ணுக்குத் தெரியாத கரோனா வைரஸ் சென்னை மக்களைப் பாடாய் படுத்திவருகிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.
ஆனால், சென்னையின் முக்கியப் பகுதிகளான ராயபுரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய பகுதிகளின் கரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டுவருகிறது. இந்தப் பரவலைத் தடுக்க சுகாதாரத் துறையும், மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. அந்தவகையில் சென்னையிலுள்ள 15 மண்டலங்களிலும் தினமும் மாநகராட்சி சார்பாக மருத்துவ முகாம்கள் நடைபெற்றுவருகின்றன.
அதன்படி இன்று 470 மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. அதிகபட்சமாக அண்ணாநகரில் 48 முகாம்களும், திருவிக நகரில் 47 முகாம்களும், தேனாம்பேட்டை, ராயபுரத்தில் 46 மருத்துவ முகாம்களும் நடைபெற்றன. இதன்மூலம் 33 ஆயிரத்து 341 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சிறப்பு ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு