கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாகத் தமிழ்நாடு முழுவதும் கடந்த 10ஆம் தேதி முதல் ஊரடங்கானது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சிறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கிற்குப் பொதுமக்கள் போதுமான ஒத்துழைப்பு தராததால் நேற்று(மே.24) முதல் தளர்வுகளில்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக 12 காவல் மாவட்ட எல்லைகளில் வாகன தணிக்கைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மிக அத்தியாவசியத் தேவைக்காக செல்வோர் கட்டாயமாக இ-பதிவு சான்று வைத்திருக்க வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இ-பதிவு சான்று இல்லாமல் பயணம் செய்பவர்களின் வாகனங்களைக் காவல் துறையினர் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கை மீறியதாக சென்னை காவல்துறை 32,980 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. அதேபோல் அத்தியாவசியத் தேவையில்லாமல் வெளியே சுற்றியதாக 35,629 வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்ததாகத் தெரிவித்துள்ளனர்.