ETV Bharat / state

திருடுபோன தமிழின் முதல் பைபிள் - லண்டனில் கண்டுபிடிப்பு - 300 ஆண்டுகள் பழமையான தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்ட பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு

தமிழில் முதன்முதலில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட 300 ஆண்டுகள் பழமையான புதிய ஏற்பாடு பைபிள் லண்டனில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

300 ஆண்டுகள் பழமையான
300 ஆண்டுகள் பழமையான
author img

By

Published : Jul 1, 2022, 4:27 PM IST

Updated : Jul 1, 2022, 4:52 PM IST

சென்னை: ஜெர்மன் நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகரான பர்த்தலோமியு ஸீகன்பால்க் என்பவர் டென்மார்க் நாட்டு மன்னரின் வேண்டுகோளை ஏற்று 1706ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வந்தார். பின்னர் நாகப்பட்டினத்தில் அச்சகத்தை நிறுவி, தமிழ் மொழியில் இந்திய நாட்டு கலாசாரம் மற்றும் மதம் சம்பந்தமான படிப்புகளை வெளியிட்டார்.

அதன் பின்னர் 1715ஆம் ஆண்டு புதிய ஏற்பாடு பைபிளை முதன்முதலாக தமிழில் மொழிபெயர்த்து அச்சடிக்கவும் செய்தார். பர்த்தலோமியு ஸீகன்பால்க், 'செந்தமிழ் பயின்ற ஜெர்மானியர்' என்று அழைக்கப்படுகிறார்.

1719ஆம் ஆண்டு ஸீகன்பால்க் இறந்த பின்பு அரிய வகை பைபிள் அப்போதைய தஞ்சாவூர் சரபோஜி மன்னருக்கு பரிசாக வழங்கப்பட்டது. இதையடுத்து பிற்காலத்தில் தமிழ்நாடு அரசாங்கத்தால் பைபிள் கைப்பற்றப்பட்டு தஞ்சை சரஸ்வதி மகால் நூலக அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

முதன்முதலில் தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்ட பைபிள்

லண்டனில் கண்டுபிடிப்பு: இந்நிலையில் விலைமதிப்பற்ற இந்த பைபிள் காணாமல் போய்விட்டதாக சரஸ்வதி மகால் அருங்காட்சியத்தின் நிர்வாக அலுவலர், தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு புகார் அளித்தார். கண்டுபிடிக்க முடியாத வழக்காக முடித்துவைக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக கடந்த 2017ஆம் ஆண்டு மீண்டும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சிலைக் கடத்தல் தடுப்புப் போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து காணாமல் போன 2005ஆம் ஆண்டுக்கான பதிவேடுகளை ஆய்வு செய்தபோது, சில வெளிநாட்டினர் குழுவாக சரபோஜியின் நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சிக்கு, அருங்காட்சியத்திற்கு வந்ததும் தெரியவந்தது.

மேலும் வெளிநாட்டு அருங்காட்சியங்களின் வலைதளங்களை வைத்து தேடியபோது, லண்டனைச் சேர்ந்த 'கிங்ஸ் கலெக்‌ஷன்' என்ற நிறுவனத்தில், காணாமல் போன 17ஆம் நுற்றாண்டின் தரங்கம்பாடியில் அச்சடிக்கப்பட்ட சரபோஜி மன்னரின் கையெழுத்தோடு கூடிய பைபிள் இருப்பதை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.

கிங்ஸ் கலெக்‌ஷன் நிறுவனம்
கிங்ஸ் கலெக்‌ஷன் நிறுவனம்

பைபிள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்திலிருந்து திருடப்பட்டு வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து திருடப்பட்ட பழங்கால பைபிளை யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் மூலமாக திரும்ப கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் எடுத்து வருகின்றனர்.

மேலும் இந்த பைபிளை திருடியது யார்? எப்படி லண்டனுக்குச்சென்றது என்பதுபற்றி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் விளம்பர பேருந்து பயணம் - முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

Last Updated : Jul 1, 2022, 4:52 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.