சென்னை பட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் சுராஜி. இவர் சவுகார்பேட்டையில் ஜெய் ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று (மே.5) மாலை சுராஜி கடையிலிருந்த 300 கிராம் தங்கம், ரூ.7.5 லட்சம் பணத்தை பையில் போட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்றார்.
பெரியமேடு காவல் நிலையம் பின்புறத்தில் உள்ள அல்லிக்குளம் இணைப்பு சாலை வழியாக அவர் சென்றபோது, எதிரே இருசக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் வந்தனர். பின்னர் அவர்கள் சுராஜியைத் தாக்கி விட்டு தங்கம், பணம் இருந்த பையை பறித்துச் சென்றனர்.
உடனே சுராஜி பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நகைக்காக மூதாட்டியை கொலை செய்த கார் ஓட்டுநர் கைது!