ETV Bharat / state

ஓபிஎஸ்க்கு 30 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு - வைத்திலிங்கம் பேட்டி

author img

By

Published : Jun 20, 2022, 6:50 PM IST

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு 30 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு இருப்பதாக அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்தார்

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

சென்னை: பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இல்லத்தில் அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அதிமுகவின் பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பது ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறை. ஆனால் இடப்பற்றாக்குறை என்று கூறி அவர்களை அழைக்காமல் இருப்பதை ஏற்க முடியாது; எனவே பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார்.

மேலும் அவர் 30 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு ஓ.பி.எஸ்க்கு உள்ளதாகவும் , இக்கடிதம் தொடர்பாக எடப்பாடி தரப்பில் இருந்து விரைந்து பதில் அளிக்க வேண்டும் எனவும் பொதுக்குழுவை நடத்த திட்டமிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் வைத்திலிங்கம் தெரிவித்தார்.

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேட்டி

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 99 விழுக்காடு பேர் எடப்பாடி பழனிசாமிக்கு தான் ஆதரவு - கே.சி. வீரமணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.