சென்னை: இது குறித்து அவர் கூறியதாவது, "திருநெல்வேலி மாவட்டம் அரசு உதவிபெறும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் இறந்துள்ளனர். மூன்று மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதற்கான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இரண்டாயிரத்து 700 மாணவர்கள் படிக்கும் பள்ளியில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. உயர் அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கட்டடத்தின் உறுதித்தன்மையை ஆராய பொறியாளர் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தனியார், அரசு, அரசு உதவிபெறும் பள்ளியின் கட்டடங்களின் உறுதித்தன்மை ஆராய உத்தரவிட்டுள்ளோம்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தில், பழுதடைந்த பள்ளி கட்டடங்கள் இருக்கும் இடங்களில் மாணவர்களை அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தோம்.
இனிமேல் இதுபோன்ற தீவினையான (துரதிர்ஷ்டம்) சம்பவம் நடைபெறக் கூடாது. இது குறித்து முதலமைச்சரின் உத்தரவின்படி அனைத்து உதவிகளும் செய்துத் தரப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பள்ளியில் சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழப்பு: தமிழிசை இரங்கல்