ETV Bharat / state

3 லட்சம் கோவாக்சின் சென்னை வருகை - corona vaccine

ஹைதராபாத்திலிருந்து மூன்று லட்சத்து 10 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் இன்று சென்னை வந்தடைந்தது.

3 லட்சம் கோவாக்சின் சென்னை வருகை
3 லட்சம் கோவாக்சின் சென்னை வருகை
author img

By

Published : Jun 22, 2021, 12:07 PM IST

சென்னை: கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுவருகிறது. அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசி, சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், கூடுதல் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் ஹைதராபாத்திலிருந்து விமானம் மூலம் 62 பார்சல்களில் மூன்று லட்சத்து 10 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் இன்று வந்தடைந்தது.

அதில் 2,21,90 டோஸ் தடுப்பூசி மருந்துகளை சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. 88,910 டோஸ் தடுப்பூசி மருந்துகளை பெரியமேட்டில் உள்ள மத்திய மருத்துவக் கிடங்கிற்கு சுகாதாரத் துறை அலுவலர்கள் அனுப்பிவைத்தனர்.

இதையும் படிங்க: 42 ஆயிரமாக குறைந்த தினசரி கரோனா பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.