கரோனா அச்சுறுத்தலை கட்டுப்படுத்தும் விதமாக, சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களை முடக்க மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இதனை தமிழ்நாடு அரசு ஏற்கும் பட்சத்தில் இந்த மூன்று மாவட்டங்களில் மார்ச் 31ஆம் தேதி வரை ரயில், பேருந்து ஆகியவை இயங்காது. இருந்தபோதிலும் அத்தியாவசிய பொருள்கள் கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கரோனா பாதிப்பு அதிகமுள்ள 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு திட்டமிட்டுவந்த நிலையில், கொல்கத்தா, டெல்லி, காந்திநகர், பெங்களூரு, ஹைதராபாத், திருவனந்தபுரம் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களை முடக்க மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.