சென்னை ராயபுரம் கிரேஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (46) இவர் திருமழிசை பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஷியாமளா (42).
இந்நிலையில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக ஷியாமளா, வீட்டில் இருந்த பீரோவை பார்த்தபோது, அதிலிருந்த 280 சவரன் நகை காணாமல்போனது தெரியவந்தது. உடனடியாக கணவர் ராஜாவுக்கு ஷியாமளா தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த ராஜா, இதுதொடர்பாக ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ராயபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, ராஜாவின் வீட்டில் ஆய்வு செய்தனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், கடந்த ஜனவரி மாதம் ராஜா குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்த நேரத்தில் கொள்ளை நடந்திருக்கலாம் எனவும், கதவு, பீரோ எதுவும் உடைக்கப்படாமல் இருப்பதால் ராஜா குடும்பத்திற்கு நன்கு அறிந்த நபர்கள் யாரோ தான் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கொலையில் முடிந்த நிலத்தகராறு விவகாரம்